Published : 06 Jan 2025 05:54 AM
Last Updated : 06 Jan 2025 05:54 AM

க​னி​மொழி 57-வது பிறந்த நாள்: முதல்வர் ஸ்டா​லினிடம் வாழ்த்து பெற்​றார்

சென்னை: திமுக துணைப் பொதுச் செயலா​ள​ரும், நாடாளு​மன்ற திமுக குழு தலைவருமான கனிமொழி நேற்று தனது 57-வதுபிறந்த நாளைக் கொண்​டாடி​னார். முன்னதாக தாய் ராஜாத்தி அம்மாளிடம் வாழ்த்து பெற்ற அவர், பின்னர் தனது சகோதரரும், முதல்​வருமான மு.க.ஸ்​டா​லினை, தேனாம்​பேட்​டை​யில் உள்ள அவரது இல்லத்​தில் சந்தித்து வாழ்த்து பெற்​றார்.

இதையடுத்து, மெரினா கடற்​கரை​யில் உள்ள முன்​னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி ஆகியோரது நினை​விடங்களில் மரியாதை செலுத்​தினார். தொடர்ந்து, ஆழ்வார்​பேட்டை இல்லத்​தில் கட்சி நிர்​வாகி​கள், தொண்​டர்​களின் வாழ்த்து​களை பெற்​றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x