Published : 23 Jul 2018 08:54 AM
Last Updated : 23 Jul 2018 08:54 AM

எம்ஜிஆர் அஞ்சல்தலையை ஏற்க மறுக்கும் அஞ்சலகங்கள்: அரசு அலுவலர்கள் அதிர்ச்சி; அபிமானிகள் அதிருப்தி

எம்ஜிஆர் பிறந்தநாள் நூற் றாண்டை முன்னிட்டு வெளியிடப் பட்ட சிறப்பு அஞ்சல்தலையை அஞ்சல் நிலையங்கள் ஏற்க மறுப்பது, அவரது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற் படுத்தியுள்ளது.

தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் 100-வது பிறந்தநாள் விழா, தமிழக அரசால் மாநிலம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, எம்ஜிஆர் நினைவு சிறப்பு அஞ்சல்தலை, சிறப்பு நாண யம், வெள்ளை நிற அஞ்சல் உறை ஆகியவை வெளியிடப்பட்டன.

அஞ்சல் உறையின் இடது புறத்தில் எம்ஜிஆர் சிரித்தபடி இருக்கும் தங்க நிறத்திலான மார்பளவு புகைப்படமும், அதன் கீழ் ‘டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன்’ என்ற பெயர் இந்தி, ஆங்கிலத்திலும் அச்சிடப்பட்டுள்ளது. இந்த உறை விலை ரூ.11 ஆகும். எம்ஜிஆர் சிறப்பு அஞ்சல்தலையிலும் இந்தி, ஆங்கிலத்தில் அவரது பெயர், புகைப்படம் அச்சிடப்பட்டுள்ளது.

பிறந்தநாள் நூற்றாண்டில் எம்ஜிஆர் அஞ்சல்தலை, நாணயம், சிறப்பு அஞ்சல் உறை ஆகியவை வெளியிடப்பட்டது அவரது ரசிகர் கள், அபிமானிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்களில் கடிதம் அனுப்புவதற்கு இவற்றைப் பயன்படுத்தப்படுத்துமாறு தெரி விக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், எம்ஜிஆர் அஞ்சல்தலையுடன் கூடிய கடிதங் களை அஞ்சல் துறையினர் ஏற்க மறுப்பதாக அரசு அலுவலர்கள் கூறுகின்றனர். ரூ.15 மதிப்புள்ள தபால்தலையின் மதிப்பை ரூ.5-க்கு மட்டுமே எடுத்துக்கொள்கின்றனர். அதனால், எம்ஜிஆர் அஞ்சல்தலை ஒட்டப்பட்டு வரும் கடிதங்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இதுகுறித்து அஞ்சலகத்தில் கேட்டால் ‘எம்ஜிஆர் அஞ்சல் தலையை ஏற்கக் கூடாது என சுற்றறிக்கை வந்திருக்கிறது’ என்று கூறுகிறார்கள் என்று அரசு அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.

எம்ஜிஆர் அஞ்சல்தலை மறுக்கப்படுவது, அரசு அலுவலர் கள் மத்தியில் அதிர்ச்சியையும், அவரது ரசிகர்களிடம் அதிருப்தி யையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும், அனைத்து அரசு அலு வலகங்களிலும் பல ஆயிரம் மதிப் புள்ள அஞ்சல்தலைகள் வாங்கி இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், இவற்றை மறுப்பதால், அரசுக்கு பல லட்சம் இழப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசு இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து கேட்டபோது, சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் ஆர்.ஆனந்த் கூறியதாவது:

அஞ்சல்தலையில் ஒரு நிறு வனம் தனது இலச்சினையை (லோகோ) அச்சிட்டுக் கொள் வதோ, தனிநபர்கள் தங்களது புகைப்படத்தை அச்சிட்டுக் கொள்வதோ ‘மை ஸ்டாம்ப்’ என்ற வகையைச் சேர்ந்தது.

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அவரது உருவம் பொறித்த 5 ஆயிரம் தாள்களை அச்சிட்டு காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்துக்கு கடந்த ஆண்டு வழங்கினோம். இந்த ஒரு தாள் விலை ரூ.300. ஒரு அஞ்சல்தலை விலை ரூ.5. இந்த அஞ்சல்தலையை பயன்படுத்தக் கூடாது என்று அஞ்சல் நிலையங்களுக்கு நாங் கள் சுற்றறிக்கை எதுவும் அனுப்ப வில்லை. மற்ற அஞ்சல்தலைகள் போல, எம்ஜிஆர் உருவம் பதித்த அஞ்சல்தலை, அஞ்சல் உறைகளை யும் பயன்படுத்தலாம். ரூ.5 மதிப்புக்கு அவை ஏற்றுக் கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அஞ்சல் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘எம்ஜிஆர் அஞ்சல் தலை ரூ.5 மதிப்பு கொண் டது. அதில் ரூ.15 என அச்சிடப் பட்டிருப்பதுதான் குழப்பத்துக்கு காரணம்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x