Published : 05 Jan 2025 03:24 AM
Last Updated : 05 Jan 2025 03:24 AM

பழநி அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டு சிறப்பு மலர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

பழநியில் கடந்த ஆண்டு நடைபெற்ற அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டுக்கான சிறப்பு மலரை சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். உடன், துணை முதல்வர் உதயநிதி, அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், தலைமைச் செயலர் நா.முருகானந்தம், அறநிலையத் துறைச் செயலர் பி.சந்தரமோகன்

சென்னை: பழநி​யில் கடந்​தாண்டு நடை பெற்ற அனைத்​துலக முத்​தமிழ் முருகன் மாநாட்டுக்கான சிறப்பு மலரை முதல்வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று வெளி​யிட்​டார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளி​யிட்ட செய்திக்​குறி்ப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழ்க் கடவுளான முரு​கப்​பெரு​மானின் பெரு​மையை உலகெங்​கிலும் உள்ள முரு​கபக்​தர்கள் அறிந்து கொள்​ளும் வகையில் அறுபடை வீடு​களில் ஒன்றான பழநி​யில் அனைத்​துலக முத்​தமிழ் முருகன் மாநாடு கடந்த 2024 ஆகஸ்ட் 24 மற்றும் 25 ஆகிய தேதி​களில் நடைபெற்​றது. இந்த மாநாட்​டில் இந்தியா மற்றும் வெளி​நாடு​களி​லிருந்து முக்கிய பிரமுகர்​கள், முருக பக்தர்கள் பங்கேற்​றனர்.

இந்து சமய அறநிலை​யத்​துறை​யின் வரலாற்றில் இம்மாநாடு முத்​தாய்ப்பாக அமைந்​தது. அத்துடன், தமிழ் கடவுளாம் முருகப் பெரு​மானின் பெரு​மைகளை மென்​மேலும் பறைசாற்றி, உலகெங்​கும் உள்ள முருக பக்தர்கள் பெரு​மை​யும் கொள்ளச் செய்​யும் வகையில் சிறப்பாக நடைபெற்​றது.

அனைத்​துலக முத்​தமிழ் முருகன் மாநாட்​டில் நீதிப​திகள் ஆற்றிய உரைகள், ஆதீனங்​களின் ஆசி உரைகள், வெளி​நாட்​டினரின் கட்டுரைகள், விருது பெற்​றவர்​களின் சிறப்பு​கள், ஆய்வரங்​கத்​தில் வாசித்த​தில் சிறந்த கட்டுரைகள், பேச்​சாளர்​களின் வாழ்த்​துரைகள் ஆகிய​வற்றை உள்ளடக்கி மாநாட்​டின் நிகழ்வு குறித்த வண்ணப் புகைப்​படங்​களுடன் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் அனைத்​துலக முத்​தமிழ் முருகன் மாநாடு - பழநி 2024 சிறப்பு மலர் தயாரிக்​கப்​பட்​டுள்​ளது.

இந்த சிறப்பு மலரை முதல்வர் மு.க. ஸ்டா​லின் நேற்று தலைமைச் செயல​கத்​தில் நடைபெற்ற நிகழ்ச்​சி​யில் வெளி​யிட்​டார். இந்நிகழ்​வில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டா​லின், அறநிலை​யத் ​துறை அமைச்சர் பி.கே.சேகர்​பாபு, தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், தலைமைச் செயலர் நா.முரு​கானந்​தம், அறநிலை​யத் துறை செயலர் பி.சந்​தரமோகன், இந்து சமய அறநிலையத் ​துறை ஆணை​யர் பி.என். ஸ்ரீதர் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x