Published : 04 Jan 2025 04:03 PM
Last Updated : 04 Jan 2025 04:03 PM

கிளாம்​பாக்கம் பேருந்து நிலை​யத்​தில் வருமா மலிவு விலை உணவகங்கள்?

கிளாம்​பாக்கம் பேருந்து நிலை​யத்​தில் பயணி​களின் நலன் கருதி விரை​வில் மலிவு விலை உணவகங்களை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்​துள்ளது. செங்​கல்​பட்டு மாவட்டம் கிளாம்​பாக்​கத்​தில் ‘கருணாநிதி நூற்றாண்டு பேருந்து நிலை​யம்’ கடந்த 2023, டிச.30-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்​டா​லினால் திறந்து வைக்​கப்​பட்​டது. இந்த பேருந்து முனை​யத்தை தினந்​தோறும் 30,000-க்​கும் மேற்​பட்ட பயணிகள் பயன்​படுத்தி வருகின்​றனர்.

கிளாம்​பாக்கம் புதிய பேருந்து முனை​யத்​தில் பயணி​களுக்கு குறைந்த விலை​யில் உணவளிக்​கும் உணவகங்கள் அமைக்​கப்​படவில்லை. மேலும், இங்கு தற்போது செயல்​படும் உணவகங்​களில் காலை மற்றும், இரவு நேரங்​களில், விலை அதிகமான உணவு வகைகளே விற்​கப்​படு​கின்றன.

அதேபோல், மதியம் சாப்​பாடு கிடைப்​ப​தில்லை. அதற்கு பதிலாக, தக்காளி சாதம், லெமன் சாதம், சாம்​பார் சாதம் போன்ற​வை​தான் கிடைக்​கின்றன. எனவே, இங்கு வரும் பயணிகள் சாப்​பிடு​வதற்கு வசதி​யாக, குறைந்த விலை​யில் உணவளிக்​கும் மலிவு விலை உணவகங்கள் அமைக்​கப்பட வேண்​டும் என பல்வேறு தரப்​பினரும் கோரிக்கை வைத்து வருகின்​றனர்.

இதைத் தொடர்ந்து, மலிவு விலை உணவகங்களை அமைக்க கடந்த ஜனவரி மாதம் முதல்வர் மு.க.ஸ்​டா​லின் உத்தர​விட்​டார். இதையடுத்து, அதற்கான அடிப்படை பணிகள் தொடங்​கப்​பட்​டுள்ளதாக அமைச்சர் பி.கே.சேகர்​பாபு தெரி​வித்​தார்.

கடந்த பிப்​ரவரி மாதம் பேருந்து முனை​யத்​தில் ரூ.14.30 கோடி மதிப்​பீட்​டில் புதிய காவல் நிலைய கட்டுமான பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா​வின்​போது​கூட, பயணி​களின் வசதிக்காக விரை​வில் மலிவு விலை உணவகம் அமைக்​கப்​படும் என்று அமைச்சர் தெரி​வித்​திருந்​தார். எனினும், எந்த முன்னேற்​ற​மும் இல்லை.

அதேபோல் கிளாம்​பாக்கம் பேருந்து நிலை​யத்​தில் உள்ள உணவகங்​களில் சம்பந்​தப்​பட்ட துறை அமைச்​சரிடம் கூறி, மலிவு விலை​யில் உணவு வழங்க ஏற்பாடு செய்​யப்​படும் என போக்கு​வரத்​துத்​துறை அமைச்சர் சிவசங்கர் ஆகஸ்ட் மாதம் தெரி​வித்​தார். ஆனால் இதுவரை உணவகங்கள் அமைக்க எந்த நடவடிக்கை​யும் எடுக்​கப்​பட​வில்லை.

இதுகுறித்து சென்னை பெருநகர வளர்ச்சி குழும அதிகாரிகள் கூறியது: கிளாம்​பாக்கம் பேருந்து நிலை​யத்​தில் மலிவு விலை உணவகங்கள் அமைக்​கப்பட உள்ளன. இதற்காக மகளிர் சுய உதவிக் குழுக்களை தேர்வு செய்து தெரிவிக்​கும்​படி, செங்​கல்​பட்டு மாவட்ட நிர்​வாகத்​துக்கு கடிதம் அனுப்​பப்​பட்​டுள்​ளது. அவர்கள் தேர்வு செய்து தெரிவிக்​கும் பட்சத்​தில் உணவகங்கள் அமைப்​ப​தற்கு இடம் ஒதுக்​கீடு செய்​யப்​படும் என தெரி​வித்​தனர்.

தினேஷ் குமார்

இதுகுறித்து சமூக ஆர்வலர் தினேஷ் குமார் கூறிய​தாவது: பேருந்து நிலையம் அனைத்து வசதிகளை கொண்​டிருந்​தா​லும் ஒரு சில வசதிகள் இல்லாமல் இருப்பது ஏழை, நடுத்தர மக்களை பாதிப்​படைய செய்​கிறது. குறிப்பாக மலிவு விலை உணவகங்கள் இல்லாத​தால் ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்​கப்​படு​கின்​றனர்.

பேருந்து நிலையம் தொடங்கி ஓர் ஆண்டு நிறைவடைய​வுள்ள நிலை​யில், அமைச்சர் மலிவு விலை உணவகங்கள் திறக்​கப்​படும் என தகவல் மட்டுமே தெரி​வித்து வருகிறார். ஆனால், எந்த நடவடிக்கை​யும் எடுக்​கப்​பட​வில்லை. இங்கு தற்போது செயல்​படும் உணவகங்​களில் விற்​கப்​படும் உணவு அதிக விலை கொண்​டதாக உள்ளது.

தனிநபர் மட்டும் உணவு அருந்​தினால் ஓரளவுக்கு சமாளிக்​கலாம். குடும்பத்​துடன் வரும் பொது​மக்கள் பெரும் சிரமத்தை சந்திக்​கின்​றனர். பேருந்து கட்டணம் குறைவாக இருக்​கின்ற நேரத்​தில், உணவுக்காக பெரும் தொகையை செலவு செய்ய வேண்டி உள்ளது.

எனவே, தமிழக அரசு உடனடியாக ஏழை, எளிய, நடுத்தர, உழைக்​கும் வர்க்​கத்​தினர் பயன்​படும் வகையில் மலிவு விலை உணவகங்களை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்​டும். அவ்வாறு தொடங்​கப்​படும் உணவகங்​களின் உள்​ளேயே பயணி​கள் அமர்ந்து உண்​ணும் வகை​யில் வச​தி​கள் ஏற்படுத்​த வேண்​டும் என்றார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x