Published : 04 Jan 2025 01:38 PM
Last Updated : 04 Jan 2025 01:38 PM
சென்னை: விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த 6 தொழிலாளர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்திரவிட்டார்.
விருதுநகர் மாவட்டம் கோட்டையூர் கிராமத்தில் செயல்பட்டுவரும் தனியார் பட்டாசு ஆலையில் இன்று (ஜன.4) காலையில் மருந்து கலக்கும் அறையில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்த அருப்புக்கோட்டையைச் சேர்ந்த சிவகுமார் (56) குருந்தமடத்தைச் சேர்ந்த வேல்முருகன் (54) காமராஜ் (54) வீரார்பட்டியைச் சேர்ந்த கண்ணன்(54), அருப்புக்கோட்டையைச் சேர்ந்த மீனாட்சிசுந்தரம் (46) செட்டிக்குறிச்சியைச் சேர்ந்த நாகராஜ் (37) ஆகிய 6 பேரின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், விபத்தில் காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஆவுடையாபுரத்தைச் சேர்ந்த முகமது சுதீன் என்பவருக்கு சிறப்பு சிகிச்சையளிக்க உத்தரவிட்டுள்ளார்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு 1 லட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT