Published : 04 Jan 2025 05:56 AM
Last Updated : 04 Jan 2025 05:56 AM

சகாயம் ஐஏஎஸ் எழுதிய ‘கடைசித் தறியில் கண்டாங்கிச் சேலை’ நூல் வெளியீடு

சென்னையில் நேற்று நடைபெற்ற விழாவில், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி உ.சகாயம் எழுதிய ‘கடைசித் தறியில் கண்டாங்கிச் சேலை’ நூலை இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு வெளியிட, முதல் பிரதியை தமிழ்நாடு தன்னுரிமைக் கழகத் தலைவர் பழ.கருப்பையா பெற்றுக்கொண்டார். உடன், அப்பா பதிப்பக உரிமையாளர் கா.பாட்சா, திரைப்பட இயக்குநர்கள் ராஜு முருகன், புகழேந்தி தங்கராஜ், மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன், கவிஞர் நா.முத்துநிலவன் உள்ளிட்டோர். படம்: ம.பிரபு

சென்னை: தேசத்​தின் நம்பிக்கை மாத இதழ் மற்றும் அப்பா பதிப்​பகம் சார்​பில், ஓய்வு​பெற்ற ஐஏஎஸ் அதிகாரி உ.சகாயம் எழுதிய ‘கடைசித் தறியில் கண்டாங்​கிச் சேலை’ நூல் வெளி​யீட்டு விழா சென்னை தேனாம்​பேட்​டை​யில் நேற்று நடைபெற்​றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் இரா.நல்​ல​கண்ணு தலைமை வகித்து, நூலை வெளி​யிட்​டார். தமிழ்​நாடு தன்னுரிமைக் கழகத் தலைவர் பழ.கருப்​பையா நூலின் முதல் பிரதி​யைப் பெற்றுக்​கொண்​டார்.

தொடர்ந்து, இரா.நல்​ல​கண்​ணு​வின் 100-வது பிறந்த நாளை, கேக் வெட்​டிக் கொண்​டாடினர். பின்னர், சகாயத்​தின் ஆதரவற்​றோருக்கான நம்பிக்கை இல்லத்​தின் நிர்​வாகி​களுக்கு விருதுகளும், மாணவர்​களுக்கு நினைவுப் பரிசுகளும் வழங்​கப்​பட்டன.

மதுரையை சேர்ந்த டி.ஆர்​. சந்​திரனுக்கு நெசவாளர் விருது, அருக்​காப்​பட்டி கருப்​பண்​ணனுக்கு விவசாயி விருது, மதுரையை சேர்ந்த மறைந்த ரவிச்​சந்​திரனுக்கு இயற்​கைப் பாது​காவலர் விருது, கதிர்​செல்வன் மற்றும் ஜானகி ஆகியோ​ருக்கு குழந்தைகள் பாது​காவலர் விருது ஆகியவை வழங்​கப்​பட்டன.

பதிப்​பாளர் கா.பாட்ஷா பேசும்​போது, “கோ-ஆப்​டெக்ஸ் மேலாண்மை இயக்​குநராக இருந்த காலக்​கட்​டத்​தில், ஓர் அதிகாரி சந்தித்த சவால்களை இந்தப் புத்​தகம் விளக்கு​கிறது. தான் செய்யக் கருதி​யதை​யும், அவற்றை யாரெல்​லாம் தடுத்​தார்கள் என்ப​தை​யும் சகாயம் ஆதாரத்​துடன் எழுதி​யிருக்​கிறார்.

இதுபோன்ற நேர்​மையான புத்​தகங்களை மிகுந்த மகிழ்ச்​சியாக வெளி​யிடு​வதுடன், வரும் காலங்​களில் தொடர்ந்து வெளி​யிட​வும் காத்​திருக்​கிறேன்” என்றார். நிகழ்​வில், திரைப்பட இயக்​குநர்கள் ராஜு முரு​கன், புகழேந்தி தங்க​ராஜ், மூத்த பத்திரிக்கை​யாளர் தமிழா தமிழா பாண்​டியன், கவிஞர் நா.முத்​து​நில​வன், அறப்​போர் இயக்க நிர்​வாகி ஜெயராமன், 10 ரூபாய் இயக்க நிர்​வாகி நல்​வினை ​விஸ்​வ​ராஜ் உள்​ளிட்​டோர்​ பங்​கேற்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x