Published : 03 Jan 2025 12:39 AM
Last Updated : 03 Jan 2025 12:39 AM
சென்னை: ‘இந்து தமிழ் திசை' பதிப்பகத்தின் 2025-ம் ஆண்டுக்கான ‘இந்து தமிழ் இயர்புக்' நூலை தமிழக அரசின் நிதித் துறைச் செயலர் த.உதயச்சந்திரன் வெளியிட்டார்.
‘இந்து தமிழ் இயர்புக்' கடந்த 2019 முதல் வெளியாகி வருகிறது. யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு தயாராகிறவர்களுக்கு பெரிதும் பயன்படும் வகையில் 7-வது ஆண்டாக ‘இந்து தமிழ் இயர்புக் 2025' வெளியாகியுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழக அரசின் நிதித் துறைச் செயலர் த.உதயச்சந்திரன் இந்நூலை நேற்று வெளியிட்டார்.
இந்த இயர்புக்கில் 25-க்கும் மேற்பட்ட துறைசார் நிபுணர்களின் சிறப்புக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. கடந்த ஆண்டில் கவனம்பெற்ற 40 விஷயங்களுக்கான விரிவான விளக்கங்கள் ‘ஏன்? எதற்கு? எப்படி?' பகுதியில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. தடம்பதித்த 50 ஆளுமைகள் குறித்த அறிமுகச் சித்திரங்கள் இடம்பெற்றுள்ளன. அறிவியல் கேள்வி-பதில் தொகுப்பு, தமிழின் முக்கிய நூல்களும் ஆசிரியர்களும், ரயில்வே தேர்வுகளில் வெற்றிக்கான வழி ஆகிய கட்டுரைகள் போட்டித் தேர்வுத் தயாரிப்புக்கு மிகவும் உதவும்.
தமிழக அரசின் திட்டங்கள், மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்த விரிவான தொகுப்புகளும் இடம்பெற்றுள்ளன. இவைதவிர, அறிவியல், சுற்றுச்சூழல், பொருளாதாரம் குறித்த கட்டுரைகள் தனித்தனிப் பகுதிகளாக இடம்பிடித்துள்ளன. இந்த நூல் 800 பக்கங்களைக் கொண்டது. இதன் விலை ரூ.275.
இந்தியாவுக்குள் இந்தப் புத்தகத்தை அஞ்சல்/கூரியர் மூலம் பெற ஒரு புத்தகத்துக்கு அஞ்சல் செலவு ரூ.30, கூடுதல் புத்தகம் ஒவ்வொன்றுக்கும் ரூ.15 சேர்த்து
அனுப்ப வேண்டும்.
KSL MEDIA LIMITED என்ற பெயரில் D.D, Money order அல்லது Cheque மூலமாக அனுப்ப வேண்டிய முகவரி: ‘இந்து தமிழ் திசை நாளிதழ்’, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை - 2. போன்: 044-35048073. புத்தகம் அனுப்ப வேண்டிய முகவரி மற்றும் செல்போன் எண்ணை அவசியம் குறிப்பிட வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு 7401296562 / 7401329402 ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம். ஆன்லைனில் பெற store.hindutamil.in/publications என்ற இணையப் பக்கத்தில் பார்க்கலாம். சென்னை புத்தகக் காட்சியில் 55, 56, 668 மற்றும் 669 ஆகிய அரங்குகளில் இந்து தமிழ் இயர்புக் கிடைக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT