Published : 02 Jan 2025 07:44 AM
Last Updated : 02 Jan 2025 07:44 AM
சென்னை: பதவிக் காலம் முடியவுள்ள 28 மாவட்டங்களில் உள்ள ஊராட்சிகளுக்கு சிறப்பு அதிகாரிகளை நியமிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதற்காக அவசர சட்டத்துக்கான கோப்புகள் ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 2019 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.
2019-ம் ஆண்டில் அதிமுக ஆட்சியின் போது சில மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, அதனையும் சேர்த்து 9 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. இதனால், 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் தேர்தல் நடந்தது. இதன் பதவிக்காலம் ஐன.5-ம் தேதியுடன் நிறைவடைகிறது
இந்நிலையில், பதவிக் காலம் முடியவுள்ள 28 மாவட்டங்களில் உள்ள ஊராட்சிகளுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான அவசர சட்டத்துக்கான கோப்புகளை ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT