Published : 02 Jan 2025 07:33 AM
Last Updated : 02 Jan 2025 07:33 AM

கடந்த ஆண்டில் மூளைச்​சாவு அடைந்த 268 பேரிடம் இருந்து உடல் உறுப்புகள் தானத்​தால் 1,500 பேருக்கு மறுவாழ்வு

சென்னை: தமிழகத்​தில் 2024-ம் ஆண்டில் மூளைச்​சாவு அடைந்த 268 பேரிடம் இருந்து உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்​பட்டு பொருத்​தி​ய​தில் 1,500 பேருக்கு மறுவாழ்வு கிடைத்​துள்ளது.

இதுதொடர்பாக மாநில உறுப்பு மாற்று ஆணையத்​தின் உறுப்​பினர் செயலர் என்.கோபால​கிருஷ்ணன் கூறிய​தாவது: உடல் உறுப்பு தானத்​தில் இந்தியா​விலேயே தமிழகம் தொடர்ந்து முதலிடத்​தில் உள்ளது. உறுப்பு தானம் செய்​பவர்​களின் உடலுக்கு அரசு சார்​பில் மரியாதை செலுத்​தப்​படும் என்று கடந்த 2023 செப்​. 23-ம் தேதி முதல்வர் அறிவித்​தார். இதைப் பின்​பற்றி, இந்தியா​வில் பல்வேறு மாநிலங்​களில் இத்தகைய திட்டம் செயல்​படுத்​தப்​பட்​டுள்​ளது.

அரசு மரியாதை அறிவிப்​புக்கு பின்னர், தமிழகத்​தில் இதுவரை 300-க்​கும் மேற்​பட்​டோர் உடல் உறுப்பு தானம் அளித்​துள்ளனர். அவர்​களுக்கு அரசு மரியாதை செலுத்​தப்​பட்​டுள்​ளது.

கடந்த 2023-ல் 178 பேர் உறுப்பு தானம் செய்​துள்ளனர். அவர்​களிடம் இருந்து தானமாக பெற்ற உறுப்புகள் மூலமாக 1,000 பேர் அரசு மற்றும் தனியார் மருத்​துவ​மனை​களில் மறுவாழ்வு பெற்றுள்​ளனர். கடந்த ஆண்டில் மூளைச்​சாவு அடைந்த 268 பேரிடம் இருந்து உறுப்புகள் தானமாகப் பெறப்​பட்டு 1,500 பேருக்கு பொருத்​தப்​பட்​டுள்ளன.

தமிழகத்​திலேயே அதிகபட்​சமாக சென்னை ராஜீவ்​காந்தி அரசு மருத்​துவ​மனை​யில் 28 பேரின் உறுப்புகள் தானமாக பெறப்​பட்​டுள்ளன. ஒருவர் மூளைச்சாவு அடையும்​போது அதனை குறிப்​பிட்ட கால இடைவெளி​யில், உரிய மருத்துவ அறிவியல் முறை​யில் உறுதி செய்வது அவசி​யம். அதைத் தொடர்ந்து உறுப்புகளை பொருத்த வேண்​டும்.

இந்த நடைமுறை​களுக்​குள் மருத்​துவ ரீ​தி​யாக​வும், சட்ட ரீ​தி​யாக​வும், உளவியல் ரீதி​யாக​வும் பல்வேறு சிக்​கல்​கள் உள்ளன. இருப்பினும் ஏராளமானோருக்கு மறு​வாழ்வும் கிடைத்​துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x