Published : 02 Jan 2025 06:57 AM
Last Updated : 02 Jan 2025 06:57 AM

ரஜினி, விஜய் புத்தாண்டு வாழ்த்து!

சென்னை: ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்திடம் வாழ்த்து பெறுவதற்காக அவரது வீட்டின் முன்பு ரசிகர்கள் குவிந்திருந்தனர். நேற்று காலை வீட்டில் இருந்து வெளியே வந்த ரஜினிகாந்த், ரசிகர்களைச் சந்தித்தார். அவரைக் கண்ட ரசிகர்கள் ஆரவாரம் செய்து தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.

இதையடுத்து ரஜினிகாந்த் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், “நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான். கைவிட மாட்டான். கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான். ஆனால் கை விட்டுவிடுவான். அனைவருக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துகள்” என்று தெரிவித்தார்.

தவெக தலைவர் விஜய் வெளியிட்ட புத்தாண்டு வாழ்த்து செய்தியில், “மலரும் புத்தாண்டில் பெண்ணுரிமை, மண்ணுரிமை காப்போம். உண்மையான சமூக நீதியுடன் சமத்துவ தமிழகம் அமைக்க உறுதி ஏற்போம் ” என்று குறிப்பிட்டிருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x