Last Updated : 31 Dec, 2024 08:34 PM

 

Published : 31 Dec 2024 08:34 PM
Last Updated : 31 Dec 2024 08:34 PM

தென்மாவட்ட ரயில்களின் கால அட்டவணையில் என்னென்ன மாற்றம்? - முழு விவரம்

கோப்புப்படம்

மதுரை: தென்மாவட்ட ரயில்களின் கால அட்டவணை நாளை (ஜன.1) முதல் மாற்றம் செய்யப்படுகிறது. கரோனவுக்கு பிறகு சிறப்பு ரயில்கள் அனைத்தும் வழக்கமான சேவைக்கு மாற்றியதாக மதுரை கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இக்கோட்டத்தில் இயக்கப்படும் ரயில்களின் கால அட்டவணை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை கரோனா நோய் தொற்றுக்கு பிறகு சிறு நகரங்களுக்கு இடையே இயக்கப்பட்டு வந்த குறைந்த தூர ரயில்கள் சிறப்பு ரயில்களாக இயக்கப்பட்டன. தற்போது இவை அனைத்தும் வழக்கமான சேவை ரயில்களாக மாற்றப்பட்டுள்ளன. பல்வேறு ரயில்களின் புறப்படும் நேரமும் இன்று (ஜன.1) முதல் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மதுரை - திருவனந்தபுரம் அமிர்தா விரைவு ரயில் (16344) மதுரையில் இருந்து மாலை 4.10 மணிக்கு பதிலாக மாலை 3.45 மணிக்கும், தஞ்சாவூர் வழியாக இயக்கப்படும் மதுரை - சென்னை மும்முறை சேவை விரைவு ரயில் (22624) மதுரையில் இருந்து இரவு 8.50 மணிக்கு பதிலாக இரவு 8.45 மணிக்கும், மதுரை - புனலூர் விரைவு ரயில் (16729) மதுரையில் இருந்து இரவு 11.25 மணிக்கு பதிலாக இரவு 11.20 மணிக்கும் புறப்படும்.

அது போன்று நெல்லை - செங்கோட்டை ரயில் (56741) நெல்லையில் இருந்து காலை 7 மணிக்கு பதிலாக காலை 6.50 மணிக்கும், நெல்லை - நாகர்கோவில் ரயில் (56708) திருநெல்வேலியில் இருந்து காலை 7.10 மணிக்கு பதிலாக காலை 7.05 மணிக்கும், நெல்லை - திருச்செந்தூர் ரயில் (56727) நெல்லையில் இருந்து காலை 7.25 மணிக்கு பதிலாக காலை 7.15 மணிக்கும், நெல்லை - செங்கோட்டை ரயில் (56743) நெல்லையில் இருந்து மதியம் 1.50 மணிக்கு பதிலாக மதியம் 1.45 மணிக்கும் புறப்படும்.

செங்கோட்டை - மயிலாடுதுறை ரயில் (16848) செங்கோட்டையிலிருந்து காலை 7.05 மணிக்கு பதிலாக காலை 6.55 மணிக்கும், செங்கோட்டை - நெல்லை ரயில் (56738) செங்கோட்டையில் இருந்து மதியம் 2.35 மணிக்கு பதிலாக மதியம் 2.05 மணிக்கும் புறப்படும். தூத்துக்குடி - நெல்லை ரயில் (56721) தூத்துக்குடியில் இருந்து மாலை 6.25 மணிக்கு பதிலாக மாலை 6.15 மணிக்கு புறப்படும்.

திருச்செந்தூர் - நெல்லை ரயில் (56728) திருச்செந்தூரிலிருந்து காலை 7.20 மணிக்கு பதிலாக காலை 7.10 மணிக்கு புறப்படும். மணியாச்சி - தூத்துக்குடி ரயில் (56726) மணியாச்சியிலிருந்து மாலை 03.10 மணிக்கு பதிலாக மாலை 3 மணிக்கும், மணியாச்சி - திருச்செந்தூர் ரயில் (56731) மணியாச்சியிலிருந்து காலை 11.05 மணிக்கு பதிலாக காலை 11 மணிக்கும், மணியாச்சி - தூத்துக்குடி ரயில் (56724) மணியாச்சியிலிருந்து இரவு 8.25 மணிக்கு பதிலாக இரவு 8.15 மணிக்கும் புறப்படும்.

காரைக்குடி - திருச்சி ரயில் (56816) காரைக்குடியில் இருந்து மாலை 3.30 மணிக்கு பதிலாக மாலை 3.15 மணிக்கு புறப்படும். வழக்கமான நேரத்துக்கு முன்னதாக புறப்படும் ரயில்களில் விபரம் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் சில ரயில்கள் வழக்கமான நேரத்துக்கு பிறகு புறப்படும் படியாகவும் கால அட்டவணை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

பயண நேரம் குறைப்பு: தாதர் - நெல்லை ரயில் (11021), சென்னை - நெல்லை ரயில் (12631), நாகர்கோவில் - சென்னை ரயில் (12668), சென்னை சென்ட்ரல் - நாகர்கோவில் ரயில் (12689), சென்னை - குருவாயூர் ரயில் (16127), கோவை - ராமேசுவரம் ரயில் (16618), ஈரோடு - செங்கோட்டை ரயில் (16845), மாயவரம் - செங்கோட்டை ரயில் (16847), பெரோஸ்பூர் - ராமேசுவரம் ரயில் (20498), திருச்செந்தூர் - சென்னை செந்தூர் ரயில் (20606), ராமேசுவரம் - புவனேஸ்வர் ரயில் (20895), நாகர்கோவில் தாம்பரம் ரயில் (22658) ஆகியவற்றின் பயண நேரம் முறையே 40, 30, 40, 35, 35, 30, 40, 35, 30, 30, 30, 40 நிமிடங்கள் குறைக்கப்பட்டுள்ளன. மேலும் 57 விரைவு ரயில்களின் பயண நேரம் 5 நிமிடம் முதல் 30 நிமிடம் வரையிலும் குறைக்கப்பட்டுள்ளது என, மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x