Published : 31 Dec 2024 04:17 PM
Last Updated : 31 Dec 2024 04:17 PM
வேலூர்: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் திமுக அரசுக்கு எதிராக முகநூல் பக்கத்தில் கருத்து தெரிவித்த வேலூர் கிராமிய காவல் நிலைய முதல் நிலை காவலர் அன்பரசன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப் பட்ட சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத் தியுள்ளது. இந்த சம்பவத்தில் திமுக அரசுக்கு எதிராக பல் வேறு போராட்டங்களில் எதிர்க்கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், சட்டம்-ஒழுங்கு பாதிப்பு தொடர்பாக சமூகவலை தளங்களில் திமுக அரசுக்கு எதிரான கடுமையான கருத்துக் களைப் பலரும் பதிவிட்டு வருகின்றனர். இதற் கிடையில், வேலூர் மாவட்டம் வேலூர் கிராமிய காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றி வருபவர் அன்பரசன்.
இவர், தனது முகநூல் பக்கத் தில் அண்ணா பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக திமுக அரசுக்கு எதிராகக் கருத்து பதிவு ஒன்றுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கருத்து பகுதியில் தனது கருத்தைப் பதிவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் மாவட்ட காவல் துறையினர் நேற்று விசாரணை மேற்கொண்டனர். இதன் தொடர்ச்சியாக அன்பரசனை சஸ்பெண்ட் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதி வாணன் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக காவல் துறை அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, ‘‘முகநூல் பக்கத்தில் திமுக அரசுக்கு எதிராக காவலர் அன்பரசன் கருத்து பதிவு செய்துள்ளார். இது சீருடை பணி விதிகளுக்கு எதிரானது என்ற புகாரின் பேரில் விசாரணை நடத்தி உறுதி செய்யப்பட்டது. மேலும், முகநூல் பக்கத்திலிருந்த அவரது கருத்து நீக்கப்பட்டதுடன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்’’ என தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT