Published : 31 Dec 2024 04:07 PM
Last Updated : 31 Dec 2024 04:07 PM
திருச்சி: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது திருச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தொடர்ந்த அவதூறு வழக்கில், திருச்சி எஸ்.பி.யாக இருந்து திருச்சி சரக டிஐஜியாக பதவி உயர்வு பெற்றுள்ள ஐபிஎஸ் அதிகாரி வருண்குமார் நேற்று மாலை நீதிமன்றத்தில் ஆஜராகி தனது தரப்பு விளக்கத்தை தெரிவித்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: சாட்டை துரைமுருகன் என்பவர் யூடியூபில் பொய்யான தகவலை பரப்பியதற்காகவும், மற்றொரு அவதூறு வழக்கிலும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டார். அப்போதிருந்து சீமான் என்னை அநாகரீகமாக பேசினார். அவரது கட்சியினர் என் குடும்பத்தினரையும் அவதூறாகவும், கேவலமாகவும் பேசினர்.
ஆனால், அவர்கள் மீது சீமான் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே அவர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுத்து தண்டனை பெற்றுத் தருவதில் உறுதியாக உள்ளேன். சீமான் மைக் முன்பு புலியாகவும், மற்ற இடங்களில் எலியாகவும் உள்ளார். எனக்கு ஒரு தொழிலதிபர் மூலமாக ஒரு குறிப்பிட்ட இடத்தில் வந்து மன்னிப்பு கேட்பதாக தூது விடுகிறார். நான் அதற்கு சம்மதிக்கவில்லை. வேண்டுமென்றால் அவர் நீதிமன்றத்தில் மன்னிப்பை தெரிவிக்கட்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT