Published : 30 Dec 2024 08:41 AM
Last Updated : 30 Dec 2024 08:41 AM

“பெண்களுக்கு அண்ணனாக, அரணாக இருப்பேன்” - தவெக தலைவர் விஜய் கடிதம்

தவெக தலைவர் விஜய்

சென்னை: “எல்லா சூழல்களிலும், நிச்சயமாக உங்களுடன் நான் உறுதியாக நிற்பேன் அண்ணனாகவும், அரணாகவும். எனவே, எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் கல்வியில் கவனம் செலுத்துங்கள். பாதுகாப்பான தமிழகத்தைப் படைத்தே தீருவோம்” என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கைப்பட எழுதி வெளியிட்டுள்ள கடிதத்தில், “‘அன்புத் தங்கைகளே! கல்வி வளாகம் முதற்கொண்டு, ஒவ்வொரு நாளும் தமிழத்தில் தாய்மார்கள் என்னருமைத் தங்கைகள், பெண் குழந்தைகள் என அனைத்துத் தரப்பும் பெண்களுக்கும் எதிராக நடக்கும் சமூக அவலங்கள், சட்டம் - ஒழுங்கு சீர்கேட்டு அவலங்கள், பாலியல் குற்றங்கள் என்று பல்வேறு வன்கொடுமைகளைக் கண்டு, உங்கள் அண்ணனாக மன அழுத்தத்திற்கும் சொல்லொனா வேதனைக்கும் ஆளாகிறேன். யாரிடம் உங்கள் பாதுகாப்பை கேட்பது? நம்மை ஆளும் ஆட்சியாளர்கள எத்தனை முறை கேட்டாலும் எந்தப் பயனுமில்லை என்பது தெரிந்ததே. அதற்காகவே இக்கடிதம்.

எல்லா சூழல்களிலும், நிச்சயமாக உங்களுடன் நான் உறுதியாக நிற்பேன் அண்ணனாகவும், அரணாகவும். எனவே, எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் கல்வியில் கவனம் செலுத்துங்கள். பாதுகாப்பான தமிழகத்தைப் படைத்தே தீருவோம். அதற்கான உத்தரவாதத்தை நாம் அனைவரும் இணைந்தே விரைவில் சாத்தியப்படுத்துவோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒரு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யாத திமுக அரசை கண்டித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சாட்டையடி போராட்டம் நடத்தினார். அதிமுக ‘யார் அந்த சார்?’ என்ற போஸ்டர்களை ஒட்டி போராட்டம் நடத்தியதோடு, இன்று கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்துகிறது. நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் அண்ணா பல்கலைக்கழ வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைக் கண்டித்துள்ளார். ஏற்கெனவே இச்சம்பவம் குறித்து கண்டன அறிக்கை வெளியிட்டிருந்த விஜய் இன்று (டிச.30) தன் கைப்பட கடிதம் ஒன்றை எழுதி கவனம் ஈர்த்துள்ளார். மேலும் வாசிக்க >> பெண்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் - விஜய் வலியுறுத்தல்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x