Published : 28 Dec 2024 06:03 AM
Last Updated : 28 Dec 2024 06:03 AM

ஒப்பந்த தொழிலா​ளர்​களுக்கு பொங்கல் போனஸ் வழங்க வலியுறுத்தி ஆர்ப்​பாட்டம்

சென்னை: அனைத்து துறை​களி​லும் தனியார்​ ம​யத்தை கைவிட வேண்​டும். பழைய ஓய்வூதிய திட்​டத்தை அமல்​படுத்த வேண்​டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்​நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சிவக்​கு​மார், மாநகராட்சி செங்​கொடி சங்கத் தலைவர் பட்டாபி ஆகியோர் தலைமை​யில் ரிப்பன் மாளிகை வளாகத்​தில் நேற்று ஆர்ப்​பாட்டம் நடைபெற்​றது.

இதில் பங்கேற்ற தொழிலா​ளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்​டனர். இதுகுறித்து செங்​கொடி சங்க பொதுச்​செய​லாளர் சீனிவாசலு கூறிய​தாவது: சென்னை மாநக​ராட்சி மற்றும் அரசுத் துறை​களில் ஏராளமான காலிப்​பணி​யிடங்கள் உள்ளன. அவற்றை நிரப்ப வேண்​டும். அனைத்து துறை​களி​லும் பணி செய்​யும் ஒப்பந்த தொழிலா​ளர்​களுக்கு பொங்கல் பண்டிகை போனஸ் வழங்க வேண்​டும்.

சென்னை மாநக​ராட்​சி​யில் பல ஆண்டு​களாக மலேரியா தடுப்பு பணி, சாலை பணி, அம்மா உணவகம், தூய்மை பணி போன்ற​வற்றில் ஈடுபடும் ஒப்பந்த தொழிலா​ளர்​களை, காலியாக உள்ள பணியிடங்​களில் நிரந்​தரமாக நியமிக்க வேண்​டும் என்பன உள்​ளிட்ட கோரிக்கைகளை வலி​யுறுத்தி ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடு​பட்​டோம். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x