Published : 26 Dec 2024 05:50 AM
Last Updated : 26 Dec 2024 05:50 AM

தேவாலயங்களில் விடிய விடிய சிறப்பு பிரார்த்தனைகள்: கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, சென்னை சாந்தோம் தேவாலயத்தில் நேற்று நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்ற கிறிஸ்தவர்கள். | படம்: எஸ்.சத்தியசீலன் |

சென்னை: கிறிஸ்​துமஸ் பண்டிகை​யையொட்டி தேவால​யங்​களில் சிறப்பு பிரார்த்​தனைகள் நடைபெற்​றது. நள்ளிர​வில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்​தனை​யில் ஏராள​மானோர் பங்கேற்​றனர். கிறிஸ்​து​வர்​களின் முக்கிய பண்டிகை​களில் ஒன்றான கிறிஸ்​துமஸ் பண்டிகை தமிழகம் முழு​வதும் நேற்று விமரிசையாக கொண்​டாடப்​பட்​டது.

வீடு​களில் நட்சத்திர வடிவிலான விளக்​குகளை ஒளிர​விட்டு, இயேசு மாட்டு தொழு​வத்​தில் பிறந்ததை குறிக்​கும் வகையிலான குடில்​கள், கிறிஸ்​துமஸ் மரங்களை அமைத்து பண்டிகையை கிறிஸ்​து​வர்கள் இன்புற வரவேற்​றனர். சென்னை மற்றும் புறநகர் பகுதி​களில் கிறிஸ்​துமஸ் பண்டிகை கொண்​டாட்டம் நேற்று முன்​தினம் நள்ளிரவு முதலே களைகட்​டியது.

சென்னை சாந்​தோம் தேவால​யம், பெசன்ட்​நகர் அன்னை வேளாங்​கண்ணி திருத்​தலம், மயிலாப்​பூர் லஸ் தேவால​யம், ராயப்​பேட்டை காணிக்கை அன்னை ஆலயம், எழும்​பூர் திருஇருதய ஆண்டவர் திருத்​தலம், புதுப்​பேட்டை புனித அந்தோணி​யார் ஆலயம், பாரி​முனை தூயமரியன்னை இணை பேரால​யம், பரங்​கிமலை புனித தோமை​யார் ஆலயம், நுங்​கம்​பாக்கம் செயின்ட் தெரசா ஆலயம் உள்ளிட்ட பல்வேறு தேவால​யங்கள் அலங்​கரிக்​கப்​பட்டு சிறப்பு திருப்​பலிகள் மற்றும் பிரார்த்​தனைகள் நடைபெற்றன.

இதில் புத்​தாடை அணிந்து ஏராளமான கிறிஸ்​து​வர்கள் பங்கேற்று பிரார்த்​தனை​களில் ஈடுபட்​டனர். பின்னர் ஒருவருக்​கொருவர் கேக்கொடுத்து கிறிஸ்​துமஸ் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்​டனர். கிறிஸ்​துமஸ் தாத்தா வேடமணிந்​தவர்கள் பொது​மக்​களுக்கு வாழ்த்து தெரி​வித்து மகிழ்ந்​தனர். அதைத்​தொடர்ந்து நேற்று அதிகாலை​யிலும் பல்வேறு பிரிவு தேவால​யங்​களி​லும் கிறிஸ்​துமஸ் சிறப்பு ஆராதனை​களும், ஜெபங்​களும் தமிழ், ஆங்கிலம், மலையாளம் என பல்வேறு மொழிகளில் நடத்​தப்​பட்டன.

சின்னமலையில் உள்ள தேவாலயத்தில் நடந்த சிறப்பு திருப்பலியில்
ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். | படம்: பா.அசோக் |

அண்ணாமலை பங்கேற்பு: இதில் ஆயிரக்​கணக்கான கிறிஸ்​து​வர்கள் கலந்து கொண்டு வழிபாடுகளை மேற்​கொண்​டனர். ஆலயங்​களில் விடிய விடிய நடத்​தப்​பட்ட ஆராதனை​களின்​போது கிறிஸ்​து​வர்​களிடம் உற்சாகம் கரைபுரண்​டது. தேவால​யங்கள் விழாக் கோலமாக மாறி​யிருந்​தது. சென்னை பெசன்ட்​நகர் வேளாங்​கண்ணி தேவால​யத்​தில் நேற்று காலை நடந்த கிறிஸ்​துமஸ் சிறப்பு ஆராதனை​யில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்​றார். ஆலயத்​தின் முன்​வரிசை​யில் அமர்ந்து போதகரின் சிறப்பு கிறிஸ்​துமஸ் உரையை கேட்​டார்.

பின்னர் ஆலயத்​துக்கு வந்திருந்த கிறிஸ்​து​வர்​களுக்கு கைக்​குலுக்கி கிறிஸ்​துமஸ் வாழ்த்துகளை பரிமாறிக்​கொண்​டார். இதுகுறித்து செய்தி​யாளர்​களிடம் “நான் 1 முதல் 7-ம் வகுப்பு வரை கிறிஸ்துவ பள்ளி​யில் தான் படித்​தேன். அதனால் அடிக்கடி தேவால​யத்​துக்கு செல்​லும் பழக்கம் எனக்கு உண்டு. இன்றைக்கு கிறிஸ்​துமஸ் விழாவை முன்னிட்டு தேவால​யத்​துக்கு வர வேண்​டும் என்ற எண்ணம் தோன்​றியது. அனைவரும் நன்றாக இருக்க​வேண்​டும் என்ப​தற்காக இறைவனிடம் வேண்​டினேன்.” என்று அவர் தெரி​வித்​தார்.

இதற்​கிடையே ஆளுநர் மற்றும் அரசியல் தலைவர்கள் வெளி​யிட்ட வாழ்த்து செய்தி:

ஆளுநர் ஆர்.என்​.ரவி: கிறிஸ்​துமஸ் திருநாளின் விசேஷமிக்க கொண்​டாட்​டத்​தில், அனைவருக்​கும் அன்பான நல்வாழ்த்து​கள். இயேசு கிறிஸ்து கொண்​டுள்ள அன்பு, தன்னலமற்ற சேவை, கருணை, மன்னிப்பு ஆகியவை நம் வாழ்​வில் அமைதி, வளம் மற்றும் மகிழ்ச்​சியை ஏற்படுத்து​வதுடன், இரக்​க​முள்ள சமுதா​யத்தை உருவாக்​க​வும் வலுப்​படுத்​தட்டும்.

முன்​னாள் முதல்வர் ஓ.பன்னீர்​செல்​வம்: ‘கேளுங்கள் கொடுக்​கப்​படும், தட்டுங்கள் திறக்​கப்​படும்’ என்னும் பொன்​மொழியை கூறிய இயேசுபிரானின் பிறந்​தநாளான கிறிஸ்​துமஸ் தினத்தை கொண்​டாடும் அனைவருக்​கும் கிறிஸ்​து​மஸ் தின நல்​வாழ்த்து​கள்.

தவெக தலை​வர் ​விஜய்: இயேசு கிறிஸ்து பிறந்த இந்த நன்​னாளில் அனை​வரது இல்​லங்​களி​லும் அன்பு, கருணை, மகிழ்ச்சி, ச​மா​தானம் நிலைத்து நீடித்​திருக்​கட்டும். இவ்​வாறு அவர்​கள் தெரி​வித்​துள்​ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x