Published : 26 Dec 2024 01:16 AM
Last Updated : 26 Dec 2024 01:16 AM
சென்னை: பப்ளிக் ரிலேஷன்ஸ் சொசைட்டி ஆஃப் இந்தியா (பிஆர்எஸ்ஐ) அமைப்பின் 46-வது அகில இந்திய தேசிய மாநாடு சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூரில் டிச. 20 முதல் 22 வரை நடைபெற்றது. இந்த மாநாட்டை அம்மாநிலத்தின் துணை முதல்வர் விஜய் சர்மா தொடங்கி வைத்தார்.
இந்த மாநாட்டில் பல்வேறு துறைகளில் சிறப்பாக சேவையாற்றிய தனிநபர்களுக்கும், நிறுவனங்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. இதில், தமிழகம் மட்டும் 9 விருதுகளை தட்டிச் சென்றுள்ளது.
குறிப்பாக, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி) தென் மண்டலப் பிரிவு, நெய்வேலி லிக்னைட் நிறுவனம் (என்எல்சி) பொதுத் துறை நிறுவனங்கள் விருதுகளை வென்றன.
மிகச் சிறந்த முறையில் நிகழ்ச்சிகளை நடத்தியதற்காக பிஆர்எஸ்ஐ-யின் சென்னைப் பிரிவுக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது. மக்கள் தொடர்புத் துறையில் நீண்ட காலமாக சிறப்பாக பணியாற்றியதற்காக பிரிசம் பி.ஆர். நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் மேலாண் இயக்குநர் சத்யன் பட்டுக்கு பி.ஆர்.எஸ்.ஐ. லீடர்ஷிப் விருது வழங்கப்பட்டது.
தமிழகத்துக்கு அதிக விருது: அப்போலோ மருத்துவமனை, கோரமண்டல் இண்டஸ்ட்ரீஸ், கேட்டலிஸ்ட் பி.ஆர். உள்ளிட்ட நிறுவனங்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.
மக்கள் தொடர்புத் துறையில் டெல்லி, மகாராஷ்டிராவைத்தொடர்ந்து தமிழகமும் இம்முறை அதிக எண்ணிக்கையில் விருதுகளை தட்டிச் சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT