Published : 25 Dec 2024 05:52 AM
Last Updated : 25 Dec 2024 05:52 AM

சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை

சென்னை: பெருநகர சென்னை மாநக​ராட்​சி​யின் 13-வது மண்டல அலுவல​கத்​தில் பணிபுரி​யும் சில அதிகாரிகள் கிறிஸ்​துமஸ் பண்டிகை, ஆங்கிலப் புத்​தாண்டு பிறப்​பையொட்டி பரிசு என்ற பெயரில் பொது​மக்​களிடம் கட்டாயப்​படுத்தி லஞ்சம் பெறு​வதாக சென்னை லஞ்ச ஒழிப்புத் துறை போலீ​ஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்​தது.

அந்த தகவலின் அடிப்​படை​யில் லஞ்ச ஒழிப்புத் துறை​யினர் அடையாறு மண்டல அலுவல​கத்​தில் நேற்று திடீர் சோதனை​யில் ஈடுபட்​டனர். பல மணி நேரம் நடைபெற்ற சோதனை​யில் கணக்​கில் வராத ரூ.1.22 லட்சம் பணம் பறிமுதல் செய்​யப்​பட்​டது.

இது தொடர்பாக விரை​வில் அந்த அலுவல​கத்​தில் பணிபுரி​யும் அதிகாரி​களுக்கு அழைப்​பாணை அனுப்பி விசாரணை செய்யப்படும். விசா​ரணை​யில் உரிய விளக்கம் அளிக்​கப்​பட​வில்​லை​யெனில், சம்பந்​தப்​பட்ட அதிகாரிகள் மீது ஊழல் தடுப்புச்சட்டத்​தின் கீழ் நட​வடிக்கை எடுக்​கப்​படும் என லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரி​கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x