Last Updated : 19 Jul, 2018 07:59 AM

 

Published : 19 Jul 2018 07:59 AM
Last Updated : 19 Jul 2018 07:59 AM

மேட்டூர் அணை நீர் தடையின்றி செல்வதை கண்காணிக்க டெல்டா மாவட்டங்களில் 10 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்: கால்வாய் மராமத்து பணிகளை கவனிக்க அரசு சிறப்பு ஏற்பாடு

மேட்டூர் அணையில் இருந்து இன்று தண்ணீர் திறக்கப்பட உள்ள நிலையில், கடைமடைப் பகுதி வரை தண்ணீர் தங்குதடையின்றி செல்வதை கண்காணிப்பதற்காக தஞ்சாவூர், திருவாரூர், நாகப் பட்டினம் ஆகிய டெல்டா மாவட்டங்களில் 10 ஐஏஎஸ் அதிகாரிகளை அரசு நியமிக்கிறது.

மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாததால் கடந்த சில ஆண்டுகளாகவே, டெல்டா பாசனத்துக்கு ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படுவது இல்லை. இந்த நிலையில், கடந்த மே மாத இறுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது.

படிப்படியாக பலத்த மழை பெய்தது. அதனால், ஜூன் மாதம் இயல்பான அளவைத் தாண்டி தென்மேற்கு பருவமழை பதிவானது.

கடந்த 10 நாட்களாக பருவமழை மேலும் தீவிரமடைந்தது. காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழை கொட்டி வருவதால் கர்நாடகாவின் 4 அணைகளும் நிரம்பின. கபினி, கிருஷ்ணராஜ சாகர் (கேஆர்எஸ்) அணைகளில் இருந்து விநாடிக்கு 1 லட்சம் கனஅடிக்கு அதிகமாக உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 1 லட்சம் கனஅடி நீர் வருவதால் அணையின் நீர்மட்டம் 100 அடியைத் தாண்டியுள்ளது.

5 ஆண்டுகளுக்கு பிறகு திறப்பு

2013-க்குப் பிறகு, அதாவது 5 ஆண்டுகள் கழித்து, இந்த ஆண்டுதான் மேட்டூர் அணை நிரம்புகிறது. 120 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் நேற்று 100 அடியைத் தாண்டியது.

இந்நிலையில், டெல்டா பாசனத்துக்காக இன்று முதல் மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்துவிடப்பட உள்ளது. அணை திறந்ததும் கடைமடைப் பகுதிகள் வரை தண்ணீர் தங்குதடையின்றி செல்வதற்காக வாய்க்கால்களை தூர்வாரும் பணி ஏற்கெனவே நடந்து வருகிறது. இப்பணியை துரிதப்படுத்தி, கண்காணித்து விரைவாக முடிக்க வேண்டியது அவசர அவசியம் என்பதால், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் வாய்க்கால்கள் தூர்வாரும் பணியைக் கண்காணிக்க 10 ஐஏஎஸ் அதிகாரிகளை அரசு நியமித்துள்ளது.

இதுகுறித்து அரசு உயர் அதிகாரிகள் கூறியதாவது:

தமிழகத்தில் குடிமராமத்து பணிகளைக் கண்காணிக்க 15 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப் பட்டுள்ளனர். இந்நிலையில், டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ளதால், டெல்டா மாவட்டங்களில் குறிப்பாக தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் பாசனக் கால்

வாய்களை தூர்வாரும் பணிகளைக் கண்காணிக்க 10 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்படுகின் றனர். கடைமடைப் பகுதிகள் வரை தண்ணீர் தங்குதடையின்றி செல்வதை உறுதி செய்வதற்காக அரசு இந்த சிறப்பு ஏற்பாட்டை செய்துள்ளது.

மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்படும் நாளில் இருந்து  கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் போய்ச் சேர 25 நாட்கள் வரை ஆகும். வாய்க்கால்களைத் தூர்

வாரி தண்ணீர் சீராகச் சென்றடைந்தால் 15 நாட்களில் கடைமடைப் பகுதிகளுக்கு தண்ணீர் சென்றடையும்.

2016-17-ம் ஆண்டு ஏரிகள், கால்வாய்கள், வரத்துக் கால்வாய்களை மராமத்து செய்வதற் காக ரூ.100 கோடியில் 1,519 பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பல்வேறு காரணங்களால் 6 பணிகள் மட்டும் கைவிடப்பட்ட நிலையில், எஞ்சியுள்ள 1,513 பணிகளும் முடிக்கப்பட்டன. இந்த ஆண்டு ரூ.328 கோடியே 95 லட்சத்தில் 1,511 பணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x