Last Updated : 24 Dec, 2024 11:24 AM

5  

Published : 24 Dec 2024 11:24 AM
Last Updated : 24 Dec 2024 11:24 AM

யாருக்குப் போகிறது அந்த 10 ரூபாய்? - டாஸ்மாக் ஊழியர்களின் புலம்பலும் கோரிக்கையும்!

“​டாஸ்​மாக்​கில் பாட்​டிலுக்கு ரூ.10 கூடு​தலாக வைத்து விற்​கின்​றனர். இதன் மூலம் ஆண்​டுக்கு ரூ.3,600 கோடி கிடைக்​கிறது. இது மிகப்​பெரிய ஊழல்” - அண்​மை​யில் நடை​பெற்ற அதிமுக பொதுக்​குழு​வில் அக்​கட்​சி​யின் பொதுச்​செய​லா​ளர் இபிஎஸ் இப்படி ஆவேசப்​பட்​டார்.

மது​விலக்கை அமல்​படுத்த வேண்​டும் என்ற முழக்​கங்​களுக்கு மத்​தி​யில், “டாஸ்​மாக்​கில் கு​வாட்​டருக்கு 10 ரூ​பாய் கூடு​தலாக வாங்​குவதை ஒழிக்கவே முடி​யா​தா?” என்று ‘குடி’மகன்​களின் கோபக் குரல்​களும் கேட்டுக்​கொண்டே இருக்​கின்றன.

தமிழகத்​தில் மொத்​தம் 4,829 டாஸ்​மாக் கடைகள் உள்ளன. இந்​தக் கடைகளில் சா​தாரண நாட்​களில் ஒரு நாளைக்கு ரூ.150 கோடிக்​கும், வார இறுதி நாட்​களில் ரூ.200 கோடிக்​கும், பண்​டிகை நாட்​களில் ரூ.250 கோடிக்​கும் மது விற்பனை நடை​பெறுகிறது. மொத்​தத்​தில், டாஸ்​மாக் மது விற்பனை மூலம் அலுங்​காமல் குலுங்​காமல் அரசு ஆண்​டுக்கு ரூ.45 ஆயிரம் கோடிக்கு வரு​மானம் ஈட்டி வரு​கிறது.

இந்​நிலை​யில், பாட்​டிலுக்கு ரூ.10 முதல் ரூ.40 வரை கூடு​தலாக வசூலிப்​பது, குறிப்​பிட்ட சில மது வகைகளை முன்னுரிமை கொடுத்து விற்பனை செய்​வது, இரவு 10 மணிக்கு மேலும் சட்​ட​விரோதமாக ‘பிளாக்​கில்’ கூடு​தல் விலைக்கு ‘சரக்கு’ விற்பனை செய்வது உள்​ளிட்ட பல்​வேறு முறை​கேடு​கள் டாஸ்​மாக் கடைகள் மூலம் நடை​பெற்று வரு​கின்றன. இத்​தகைய முறை​கேடுகளை தடுக்க மது​பாட்​டில்​கள் உற்​பத்தி முதல் ‘குடி’மகன்​களின் கைக்கு செல்​லும் வரை அனைத்​தை​யும் கண்​காணிக்க டாஸ்​மாக் கடைகள் கணினி மய​மாக்​கப்​பட்டு வரு​கின்றன.

முதல்​கட்​ட​மாக, ராம​நாத​புரம், ராணிப்​பேட்டை மாவட்​டங்​களில் டாஸ்​மாக் கடைகளில் இந்த சிஸ்​டம் செயல்​படுத்​தப்​பட்​டது. அண்​மை​யில், காஞ்​சிபுரம், செங்​கல்​பட்டு மாவட்​டங்​களில் ‘பார்​கோடு ரீடர்’ கருவி மூலம் மது​பாட்​டில்களை ஸ்​கேன் செய்து விற்பனை செய்​யும் முறை​யும் தொடங்​கப்​பட்​டுள்​ளது. ஆனால், இந்த திட்​டம் அமல்​படுத்​தப்​பட்​டாலும், பாட்​டிலுக்கு கூடு​தலாக பணம் வசூலிப்பது நின்​ற​பாடில்லை. இப்படி கூடு​தலாக வசூலிக்​கப்​படும் தொகை மட்டுமே ஒரு நாளைக்கு சுமார் ரூ.1 கோடி என்​கிறார்​கள் டாஸ்​மாக் பணி​யாளர்​கள்.

இந்த 1 கோடி ரூ​பா​யும் யாருக்​குச் செல்​கிறது என்று கேட்​டால் டாஸ்​மாக் ஊழியர்​கள் கண்​ணீர் வடிக்​கிறார்​கள். “கடைக்கு கூடு​தல் வாடகை, காவலா​ளிக்கு ஊதி​யம், பெட்டி இறக்​குக் கூலி, பாட்​டில் ‘டேமேஜ்’, ஆடிட்​டர்​கள், கலால் அலு​வலர்​களுக்கான ‘கவனிப்பு’ என பல​வற்றுக்​கும் நாங்​கள் தான் செல​வழித்தாக வேண்​டும். இதில்​லாமல், ரோந்து வரும் போலீ​ஸாருக்கு மாமூலுடன் அவர்​கள் விரும்​பும் ‘சரக்கை​யும்’ கொடுத்தாக வேண்​டும். அரசி​யல் கட்​சி​யினர், ரவுடிகள், பத்​திரி​கை​யாளர்​கள் உள்​ளிட்​டோருக்​கும் பணம் தர​வேண்டி இருக்​கிறது. இதையெல்​லாம் நாங்​கள் வாங்​கும் ரூ.10 ஆயிரம் சம்​பளத்​தில் எப்படி சமாளிக்க முடி​யும்?

கூடு​தல் பணம் வசூலிக்​கக் கூ​டாது என்று சொல்​லும் அதிகாரி​களுக்கே இந்​தப் பணத்​தில் இருந்து தான் ‘கட்​டிங்’ போகிறது. மாவட்ட மேலா​ளர்​கள் ரூ.50 லட்​சம் வரை கையூட்டு கொடுத்​துத்​தான் டி​ரான்ஸ்ஃபரில் வரு​கிறார்​கள். அந்​தப் பணத்தை எடுக்க எங்களை பல விதத்​தி​லும் கசக்​கிப் பிழிகிறார்​கள். அத​னால் அவர்​கள், கூடு​தலாக பணம் வசூலிக்​கக் கூ​டாது என பெயரளவுக்கு சொல்​லி​விட்டு கண்​டும் காணா​மல் இருந்து விடு​கிறார்​கள்.

டாஸ்​மாக் வரு​மானத்​தில் 1 சதவீதம் மட்டுமே டாஸ்​மாக்​கிற்காக செல​விடப் படு​கிறது. எஞ்​சிய 99 சதவீதத்தை வேறு துறை​களுக்கு அரசு செல​வழிக்​கிறது. டாஸ்​மாக் ஊழியர்​களுக்கு ஊதி​யத்தை உயர்த்​தாமல், அவர்​களுக்கு பதவி உயர்வு அளிக்​காமல் அரசு எத்தனை கட்டுப்​பாடு​களைப் போட்​டாலும், எந்த புது சிஸ்​டத்தை அமல்​படுத்​தி​னாலும் பாட்​டிலுக்கு 10 ரூ​பாய் வசூலிப்​ப​தை தடுத்​து நிறுத்​தவே முடி​யாது” என்​கிறார்​கள்​ டாஸ்​மாக்​ பணி​யாளர்​கள்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x