Published : 24 Dec 2024 12:08 AM
Last Updated : 24 Dec 2024 12:08 AM

மனசாட்​சியை மறந்து பேசுகிறது பாமக: அமைச்சர் எ.வ.வேலு குற்றச்சாட்டு

கோப்புப் படம்

சேலம்: சேலம் சூரமங்​கலம் உழவர் சந்தை தொடங்கி 25 ஆண்டுகள் நிறைவடைந்​ததையொட்டி நடந்த வெள்​ளி​விழா கொண்டாட்​டத்​தில், அமைச்சர்கள் எ.வ.வேலு, ராஜேந்திரன் ஆகியோர் பங்கேற்​றனர்.

பின்னர் அமைச்சர் எ.வ.வேலு செய்தி​யாளர்​களிடம் கூறும்​போது, “விவசாயிகளின் நலன் காத்​திடும் வகையில் வேளாண்​மைத் துறைக்கென தனி நிதி​நிலை அறிக்கையை முதல்வர் ஸ்டா​லின் செயல்​படுத்தி உள்ளார். 100 உழவர் சந்தை​களுக்கு ரூ.27.50 கோடி நிதி ஒதுக்​கீடு செய்து புனரமைக்​கப்​பட்​டுள்​ளது” என்றார்.

திரு​வண்ணா​மலை​யில் பாமக தலைவர் அன்புமணி பேசும்​போது, தமிழக அரசு விவசா​யிகளுக்கு எதுவுமே செய்ய​வில்லை என கூறி​யுள்​ளாரே என்ற செய்தி​யாளர்களின் கேள்விக்கு, “எதிர்க்​கட்​சியாக இருக்​கிறோம் என்ப​தால் பாமக மனசாட்​சியை மறந்து பேசி வருகிறது. வேளாண்மைக்கு என தனி பட்ஜெட் போட்டு நிதி ஒதுக்கு​கிறோம். ஆனால், ​காழ்ப்பு​ணர்ச்சியால் இவ்வாறு பேசுகின்​றனர்” என்​றார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x