Last Updated : 14 Jul, 2018 09:12 AM

 

Published : 14 Jul 2018 09:12 AM
Last Updated : 14 Jul 2018 09:12 AM

மக்களவைத் தொகுதி வாரியாக செல்வாக்கை ஆய்வு செய்ய குழு: தேர்தல் பணிகளைத் தொடங்கிய பாஜக, திமுக, அமமுக- வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் நியமனத்தில் ரஜினி மக்கள் மன்றம் தீவிரம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியிலுள்ள 40 மக்களவைத் தொகுதிகளிலும் தங்களுக்குள்ள செல்வாக்கு, வெற்றிவாய்ப்பு குறித்து ஆராயவும், கட்சியினரை முனைப்புடன் செயல்பட வைக்கவும் பாஜக, திமுக, அமமுக ஆகிய கட்சிகள் குழுக்களை அமைத்து தேர்தல் களத்தில் இறங்கியுள்ளன. ரஜினி மக்கள் மன்றத்தினர் வாக்குச்சாவடிகள் வாரியாக பொறுப்பாளர்கள், உறுப்பினர்களை நியமிக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே எஞ்சியிருக்கும் நிலையில் வாக் குச்சாவடி வாரியாக கட்சியின் கட்டமைப்பை வலுவாக்கும் முனைப்புடன் முக்கிய அரசியல் கட்சிகள் களப்பணிகளைத் தொடங்கி இருக்கின்றன.

பாஜக

தேசிய கட்சியான பாஜக வாக்குச்சாவடிகள்தோறும் சக்தி கேந்திர பொறுப்பாளர்கள், மகாசக்தி கேந்திர பொறுப்பாளர்களை நியமித்துள்ளது. சமீபத்தில், சென்னையில் நடைபெற்ற கட்சி மாநாட்டில், தேசிய தலைவர் அமித்ஷா முன்னிலையில் அவர்களை கூட்டி பிரம்மாண்டத்தை காட்டியுள்ளது. அடுத்தகட்டமாக அக்டோபரில், அனைத்து வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள், முக்கிய நிர்வாகி கள் என 1 லட்சத்துக்கும் அதிகமானோரை சென்னையில் திரட்டி மாநாடு நடத்தவும், அதில் பிரதமர் நரேந்திரமோடியை பங்கேற்கச் செய்யவும் திட்டமிட்டு பணிகள் முடுக்கி விடப்பட்டிருக்கின்றன.

அப்போது ஏறக்குறைய தமிழகத்தில் பாஜக கூட்டணி குறித்து முடிவாகிவிடும் என கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கிறார்கள். இதற்கு முன்னதாக தொகுதிவாரியாக தங்களுக்குள்ள செல்வாக்கு, வெற்றிவாய்ப்பு உள்ளிட்ட கள நிலவரங்களை நேரில் அறிந்து கட்சியின் தேசிய தலைமைக்கு தெரிவிக்க, தமிழக பாஜக முக்கிய நிர்வாகிகள் பணிக்கப்பட்டுள்ளனர். இதற்காக நிர்வாகிகளை கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தக் குழுக்களில் இடம்பெற்றுள்ளவர் கள் ஒவ்வொரு தொகுதிக்கும் சென்று வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் உள்ளிட்ட அடிமட்ட நிலையிலுள்ள கட்சியினரை சந்தித்து பேசிவருகிறார்கள்.

ஏற்கெனவே தமிழகத்தில் போட்டியிட வாய்ப்புள்ளதாக பாஜக தேர்வு செய்துள்ள 12 தொகுதிகளிலும் வெற்றிவாய்ப்பை அதிகரிப்பதற்கான காரணிகளை யும் இந்தக் குழுவினர் கண்டறிந்து தலைமைக்கு தெரியப்படுத்துவார்கள் என முக்கிய நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

அதிமுக

அதிமுக சார்பில் வரும் 16-ம் தேதி சென்னையில் மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பங்கேற்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களும் அழைக்கப்பட்டுள்ளனர். இந்தக் கூட்டத்துக்குப் பிறகு தேர்தல் பணிகளை அதிமுக தொடங்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.

திமுக

தமிழகம் மற்றும் புதுச்சேரியிலுள்ள 65 ஆயிரம் வாக்குச்சாவடிகளுக்கும் பொறுப்பாளர்கள் பட்டியலை திமுக தயாரித்து வரு கிறது. திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் லண்டனுக்கு செல்லும் முன்பு 40 மக்களவைத் தொகுதியின் களநிலவரத்தை நேரில் அறிந்து தலைமைக்கு தெரிவிக்க ஏதுவாக 15 பேர் அடங்கிய சிறப்பு குழுவை அமைத்து, அவர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். 50 வயதுக்கு உட்பட்ட, கட்சிப் பணியில் முழுவீச்சில் ஈடுபடுவோரை மட்டுமே இக்குழுவுக்கு ஸ்டா லின் தேர்வு செய்துள்ளார். இக்குழுவினர் பல்வேறு மாவட்டங்களுக்கும் தற்போது பயணமாகியிருக்கிறார்கள். தொகுதி குறித்த உண்மை நிலவரங்களை தொகுத்து, லண்டனிலிருந்து திரும்பிவந்தபின் ஸ்டாலினிடம் அறிக்கையாக இவர்கள் அளிப்பார்கள் எனவும், இதை அடிப்படையாகக் கொண்டு தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு, போட்டியிடும் வேட்பாளர் கள் யார் என்பது குறித்து, திமுக தலைமை முடிவு செய்யும் எனவும் அக்கட்சி வட்டாரங் கள் தெரிவிக்கின்றன.

அமமுக

அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கட்சியை அடிமட்ட நிலையில் வலுவாக்கும் நோக்கத்தில் நிர்வாகிகளை கள மிறக்கியுள்ளார். கிராமங்கள்தோறும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை அமமுக நடத்தி வரு கிறது. அதில் கட்சிக்கு புதிய உறுப்பினர்கள் சேர்க்கைப் படிவங்கள் வழங்கப்படுகின்றன. தற்போது மக்களவை தேர்தலுக்காக அமமுக சார்பில் குழு அமைக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக அக்கட்சியினர் தெரிவித்தனர்.

ரஜினிகாந்த்

கட்சியை அதிகாரபூர்வமாக தொடங்கும் முன் வாக்குச்சாவடி நிலையில் பொறுப்பாளர்கள், உறுப்பினர்களை சேர்த்துவிட நடிகர் ரஜினிகாந்த் திட்டமிட்டுள்ளார். இதன்படி தற் போது தமிழகத்தில் ஏறக்குறைய 60 சதவீதம் வாக்குச் சாவடிகளுக்கும் தலா 5 நிர்வாகிகள், 25 உறுப்பினர்கள் என 30 பேர் கொண்ட அமைப்பு உருவாக்கப்பட்டு விட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தமுள்ள 1,600 வாக்குச் சாவடிகளுக்கும் தலா 30 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் சங்கரன்கோவில் ஒன்றியம், நகரத்திலும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்களை நியமித்துள்ளனர். வாக்குச்சாவடிக்கு 30 பேர் கொண்ட குழுவை முதலில் அமைத்துள்ள நிர்வாகிகளை, சென்னைக்கு நேரில் அழைத்து கவுரவிக்க ரஜினிகாந்த் திட்டமிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x