Published : 22 Dec 2024 06:36 AM
Last Updated : 22 Dec 2024 06:36 AM

கூலிப்படை விவகாரத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்: அரசுக்கு திருமாவளவன் வலியுறுத்தல்

சென்னை: கூலிப்படை விவகாரத்தில் தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறினார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சர்ச்சையை உருவாக்கக் கூடிய வர்தான். தமிழக அரசுக்கு தலைவலி கொடுப்பதாக எண்ணிக் கொண்டு, ஆட்சி நிர்வாகத்துக்கு முட்டுக்கட்டை போடுகிறார். அது அவரது இயல்பான போக்காகவே மாறி இருக்கிறது. எனவே, அவரை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.

பட்டப் பகலில், நீதிமன்ற வளாகத்தில் படுகொலை செய்யும் அளவுக்கு கூலிப்படையினர் துணிச்சல் பெற்றுள்ளது பெரும் அதிர்ச்சியைத் தருகிறது. இந்தப் பிரச்சினையில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். நெல்லை கொலைச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பண்டிகை காலத்தில் தேர்வு… தமிழக மக்களின் உணர்வுகளை மதிக்க மத்திய பாஜக அரசு தயாராக இல்லை. யுஜிசி நெட் தேர்வை பண்டிகை காலத்தில் நடத்துவதன் மூலம் தமிழக மக்களின் கலாசாரத்தை அவமதிக்கின்றனர். மத்திய பாஜக அரசின் இந்தப் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x