Published : 21 Dec 2024 03:13 AM
Last Updated : 21 Dec 2024 03:13 AM

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமானது: தமிழகத்தில் எப்போது மழை?

சென்னை: வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்​றழுத்த தாழ்வுப் பகுதி, காற்​றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்​பெற்​றது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்திக்​குறிப்​பு: வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்​றழுத்த தாழ்வு பகுதி காற்​றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்​பெற்று, மேற்கு மத்திய வங்கக் கடல் பகுதி​யில் ஆந்திர கடலோரப் பகுதியை ஒட்டி நிலவி வருகிறது. இது ஆந்திர மாநிலம் விசாகப்​பட்​டினத்​துக்கு தெற்கே 450 கிமீ தொலை​விலும், சென்னைக்கு வடகிழக்கே 370 கிமீ தொலை​விலும் உள்​ளது.

இன்று தமிழகத்​தில் ஓரிரு இடங்​களி​லும், புதுச்​சேரி மற்றும் காரைக்​கால் பகுதி​களி​லும் மிதமான மழை பெய்​யக்​கூடும். அதிகாலை வேளை​யில் ஓரிரு இடங்​களில் லேசான பனிமூட்டம் காணப்​படும். 22 முதல் 26-ம் தேதி வரை தமிழகத்​தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்​யக்​கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதி​களில் வானம் ஓரளவு மேகமூட்​டத்​துடன் காணப்​படும். நகரின் ஒருசில பகுதி​களில் லேசான மழை பெய்​யக்​கூடும்.

நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்​தில் அதிகபட்​சமாக திரு​வாரூர் மாவட்டம் நீடா​மங்​கலத்​தில் 7 செ.மீ, திரு​வாரூரில் 6 செ.மீ, மதுரை கல்லந்​திரி, சென்னை எண்ணூர், நாகப்​பட்​டினம் மாவட்டம் திருக்குவளை ஆகிய இடங்​களில் தலா 5 செ.மீ, மதுரை மாவட்டம் புலிப்​பட்​டி​யில் 4 செ.மீ மழை ப​திவாகி​யுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x