Published : 20 Dec 2024 03:24 PM
Last Updated : 20 Dec 2024 03:24 PM
ராமேசுவரம்: இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 9 பேர் தாயகம் திரும்பினர்.
நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த ஒரு விசைப் படகை கடந்த ஜூ 25-ல் கைப்பற்றி, படகிலிருந்த 10 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.
கடந்த டிசம்பர் 12 அன்று மல்லாகம் நீதிமன்றம், 10 மீனவர்களில் 9 மீனவர்களை மீண்டும் இலங்கை கடற்பரப்பில் மீன் பிடித்தால் சிறை தண்டனை விதிக்கப்படும் என்ற நிபந்தனையுடன் விடுதலை செய்தும், விசைப்படகின் ஓட்டுநருக்கு 1 ஆண்டு சிறை தண்டனை, அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தது.
விடுதலை செய்யப்பட்ட 9 மீனவர்களும் கொழும்பு விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு வியாழக்கிழமை இரவு சென்னை வந்தடைந்தனர். தொடர்ந்து மீனவர்கள் தனி வாகனத்தில் நாகப்பட்டினத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT