Published : 18 Dec 2024 02:19 PM
Last Updated : 18 Dec 2024 02:19 PM
சென்னை: தமிழகத்தில் 10 புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ. கணேசன் திறந்து வைத்தார்.
இதுதொடர்பாக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: இளைஞர்கள் வேலைக்கேற்ற திறனைப் பெறவும் திறன் பெற்ற மனித வளத்தை உருவாக்கவும் தமிழகத்தில் புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் துவக்கப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட்டவாறு இளைஞர்களுக்கு, பயனுள்ள வேலைவாய்ப்பை பெற்றுத் தருவதற்கும் தொழிற்சாலைகளுக்கு ஏற்றவாறு இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி அளித்து வேலைவாய்ப்பை உருவாக்கிடவும் கடலூர் மாவட்டம் வேப்பூர், திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை, நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம், புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டம் கமுதி, திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி, திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம், தூத்துக்குடி மாவட்டம் ஏரல் ஆகிய 10 இடங்களில் புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் 111 கோடி ரூபாய் செலவில் துவங்கிட அரசாணை வெளியிடப்பட்டது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT