Last Updated : 16 Dec, 2024 03:57 PM

 

Published : 16 Dec 2024 03:57 PM
Last Updated : 16 Dec 2024 03:57 PM

மாவட்டம் விட்டு மாவட்டம் மா.செ பதவியா? - புஸ்ஸி ஆனந்துக்கு எதிராக புலம்பும் தவெக தம்பிகள்!

10 மாதத்தில் ஒரு கோடி பேரை கட்சியில் சேர்த்திருப்பதாக விஜய்யின் தவெக தம்பிகள் மார்தட்டி நிற்கும் அதேவேளையில், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு எதிராக ஆங்காங்கே புலம்பல்களும் கேட்கத் தொடங்கி இருக்கின்றன. தவெக-வுக்கு மாவட்ட அளவிலான நிர்வாகிகள் ஜனவரி தொடக்​கத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்​கப்​படலாம் என்கிறார்கள். அதற்கான வேலைகளில் மும்முரமாக இருக்கும் புஸ்ஸி ஆனந்த், கட்சியின் தலைமை அலுவல​கத்தில் அடிக்கடி ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகிறார்.

தவெக கட்சி மாவட்​டங்கள் 120 மாவட்​டங்​களாகப் பிரிக்​கப்​பட்​டிருப்​ப​தாகவும் அதற்கான செயலா​ளர்கள் பட்டியல் கிட்டத்தட்ட தயாராகி​விட்​ட​தாகவும் சொல்லப்​படு​கிறது. இதில், விஜய் மக்கள் இயக்கத்தில் செம்மை​யாகச் செயல்​பட்​ட​வர்​களுக்கு தவெக-வில் உரிய முக்கி​யத்துவம் கொடுத்து பதவிகளை வழங்க வேண்டும் என்பது ஆனந்துக்கு விஜய் தந்திருக்கும் அட்வைஸ்.

இதை நம்பி விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்டத் தலைவர்கள், தங்களது தொகுதியில் கட்சிப் பணிகளில் தீவிரம்​காட்டி வருகிறார்கள். ஆனால், விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட தலைவர்​களுக்கு, அதே மாவட்​டத்​தில், மாவட்டச் செயலாளர் பதவியை வழங்காமல், வேறு மாவட்​டத்தில் அவர்களை மாவட்டச் செயலா​ளர்களாக நியமிக்க புஸ்ஸி ஆனந்த முடிவுசெய்திருப்பதாக கூறப்​படு​கிறது. இதனால், விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர்கள், புஸ்ஸி ஆனந்த் மீது கடும் அதிருப்​தியில் உள்ளனர்.

இதுதொடர்பாக பேசிய விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர்கள் சிலர், “விஜய் மக்கள் இயக்கம் தொடங்​கப்​பட்​டதில் இருந்து மாவட்ட தலைவர்களாக இருக்கும் நாங்கள் எங்கள் பகுதியில் மக்கள் சேவை செய்து பெயரெடுத்து வைத்திருக்​கிறோம். எங்கள் பகுதியில் எங்களுக்கான ஒரு வலுவான டீமையும் உருவாக்கி வைத்திருக்​கிறோம்.

அப்படிப்பட்ட எங்களை எங்களுக்குப் பரிச்​சயமான பகுதிகளை விட்டு​விட்டு வேறு மாவட்​டத்​துக்கு மாவட்டச் செயலாளராக நியமிக்க திட்ட​மிட்​டுள்ளார் புஸ்ஸி ஆனந்த். அப்படி நியமிக்​கப்​பட்டால் புதிய இடத்தில் நம்பிக்கையான ஒரு டீமையும் வலுவான கட்சிக் கட்டமைப்​பையும் உருவாக்குவது கஷ்டமாகி​விடும்.

அதுமட்டுமல்​லாது, எங்களது வருகையால் அங்கு ஏற்கெனவே களத்தில் இருக்கும் மன்றத்​தினருக்கும் நெருடல் ஏற்படலாம். சும்மாவே ஒரு மாவட்ட நிர்வாகிகளை இன்னொரு மாவட்ட நிர்வாகி​களுக்கு பிடிப்​ப​தில்லை. அப்படி இருக்கை​யில், நிர்வாகிகளை மாவட்டம் விட்டு மாவட்டம் மாற்றுவது கட்சிக்கு நல்லதல்ல.

இதுகுறித்து தலைவரிடம் எடுத்துச் சொல்லலாம் என நினைத்​தா​லும், பொதுச்​செய​லாளரை மீறி, தலைவரை சந்திக்க முடிய​வில்லை. பல தகவல்களை நேரடியாக தலைவரிடம் சொல்ல முற்படும்​போது, பொதுச்​செய​லாளர் அதற்குத் தடங்கலாகவே இருக்கிறார். ஒருவேளை, அந்தந்த மாவட்​டங்​களின் மன்றத் தலைவர்​களுக்கு அவர்களது மாவட்​டத்​திலேயே செயலாளர் பதவிகளை வழங்காமல், வேறு மாவட்​டத்தில் வழங்கி​னால், தலைவர் வீட்டின் முன் போராட்டம் நடத்தி இந்த விஷயத்தை அவரின் கவனத்​துக்கு கொண்டு​போவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை” என்றனர்.

மாவட்டத் தலைவர்​களின் இந்த மனப்பு​ழுக்கம் குறித்து தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்திடம் விளக்கம் கேட்க, அவரை தொலைபேசியில் அழைத்​தோம். பல முறை தொடர்பு ​கொண்​டும், அவர் நமது அழைப்பை எடுக்​கவில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x