Published : 14 Dec 2024 06:02 PM
Last Updated : 14 Dec 2024 06:02 PM

அமராவதி ஆற்றில் வெள்ளப் பெருக்கு: கரூர் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

கரூர் ஆண்டாங்கோவில் அமராவதி தடுப்பணையில் அதிகளவில் வெள்ளநீர் செல்லவதை மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் ஆய்வு செய்தார்.

கரூர்: அமராவதி ஆற்றில் 75,751 கன அடி வெள்ள நீர் சென்றதையொட்டி கரூர் மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் சனிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆற்றில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் செல்வதை திருமாநிலையூர் அமராவதி ஆற்றுப்பாலத்தில் நின்று ஆபத்தை உணராமல், மக்கள் வேடிக்கை பார்த்ததுடன் சுயபடம் எடுத்து மகிழ்ந்தனர்.

கரூர் அருகேயுள்ள பெரிய ஆண்டாங்கோவில், அணைப்பாளையம், ஒத்தமாந்துறை ஆகிய பகுதிகளில் அமராவதி ஆற்றில் இன்று (டிச. 14) அதிகளவு தண்ணீர் செல்வதை மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அமராவதி அணையில் நேற்று 36,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் சேர்ந்து நேற்று தாராபுரம் தடுப்பணைக்கு 75,000 கன அடி தண்ணீர் அமராவதி ஆற்றில் வந்தது.

பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு இத்தண்ணீர் வெள்ளிக்கிழமை இரவு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால் அமராவதி ஆற்றில் இரவு முதல் அதிகளவு தண்ணீர் சென்று வருகிறது. இரவு நேரத்திலும் திருமாநிலையூர் அமராவதி ஆற்றுப் பாலத்தில் ஆபத்தை உணராமல் மக்கள் நின்று வேடிக்கை பார்த்தனர். ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு இன்று (டிச.14) காலை 6.30 மணிக்கு 75,751 கன அடி தண்ணீர் வந்தது.

கரூர் திருமாநிலையூர் அமராவதி ஆற்றுப்பாலத்தில் நின்று ஆற்றில் தண்ணீர் செல்வதை வேடிக்கை பார்க்கும் மக்கள்

திருமாநிலையூர் அமராவதி ஆற்றில் அதிகபட்ச தண்ணீர் சென்ற நிலையில் அமராவதி ஆற்றுப்பாலத்தில் இரு சக்கர வாகனம், ஆட்டோ, கார்களை நிறுத்தி வெள்ளநீர் செல்வதை பொதுமக்கள் வேடிக்கை பார்த்தனர். மேலும் பலர் சுயபடம் எடுத்துக் கொண்டனர். அமராவதி அணையில் திறக்கப்படும் நீரில் அளவு குறைக்கப்பட்டதை அடுத்து அமராவதி ஆற்றில் செல்லும் நீரில் அளவு படிப்படியாக கு றைந்துள்ளது.

இதுகுறித்து ஆட்சியர் மீ.தங்கவேல் கூறியதாவது: “பெரிய ஆண்டாங்கோவில், அணைப்பாளையம், ஒத்தமாந்துறை ஆகிய பகுதிகளில் அமராவதி ஆற்றில் அதிகளவு தண்ணீர் செல்வதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. மேலும், ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கவும் மற்றும் நீர் நிலைகளின் கொள்ளளவை தொடர்ந்து கண்காணித்திட தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அமராவதி அணையின் நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் கூடுதல் நீர் திறக்கப்பட வாய்ப்புள்ளது என்று அவர் கூறினார். அப்போது, மாவட்ட வருவாய் அலுவலர் ம.க.ண்ணன், அமராவதி அணை வடிநிலக்கோட்டம் (தாராபுரம்) செயற்பொறியாளர் சுப்பிரமணியன், உதவி செயற்பொறியாளர் சீனிவாசன், உதவிப்பொறியாளர் சந்தோஷ்குமார், வ ட்டாட்சியர்கள் குணசேகரன், மகேந்திரன் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x