Published : 14 Dec 2024 04:34 PM
Last Updated : 14 Dec 2024 04:34 PM
சென்னை: கனமழை எச்சரிக்கை மற்றும் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் நாடாளுமன்றத் கூட்டத் தொடரில் திமுக உறுப்பினர்கள் முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வேண்டி இருப்பதாலும், வரும் டிச.18-ம் தேதி நடைபெறவிருந்த திமுக தலைமைச் செயற்குழுக் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்துக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாலும், தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நாடாளுமன்றத் கூட்டத் தொடரில் திமுக உறுப்பினர்கள் முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வேண்டியுள்ளதாலும், டிச.18-ம் தேதியன்று சென்னையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட திமுக தலைமைச் செயற்குழுக் கூட்டம் தற்போது ஒத்திவைக்கப்படுகிறது. திமுக தலைமைச் செயற்குழுக் கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, சென்னையில் வரும் டிச.18-ம் தேதி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் தலைமைச் செயற்குழுக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT