Published : 14 Dec 2024 01:37 AM
Last Updated : 14 Dec 2024 01:37 AM
தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், உதயநிதி, விஜய்யை ‘அன்புத்தம்பி’ என குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் தனது 74-வது பிறந்தநாளை ஜெய்ப்பூரில் நடக்கும் ‘கூலி’ படப்பிடிப்பில் படக்குழுவினருடன் நேற்று முன்தினம் கேக் வெட்டி கொண்டாடினார். இந்நிலையில், தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ரஜினிகாந்த் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
என்னுடைய பிறந்தநாளன்று என்னை மனமார வாழ்த்திய என்னுடைய அருமை நண்பர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அன்புத்தம்பி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ஆந்திர முதல்வர் நண்பர் சந்திரபாபு நாயுடு மற்றும் ஓபன்னீர்செல்வம், வைகோ, வி.கே.சசிகலா, திருநாவுக்கரசர், துரைமுருகன், அன்புமணி, டி.டி.வி.தினகரன், அண்ணாமலை, பிரேமலதா, திருமாவளவன், வாசன், ஏ.சி.சண்முகம், சீமான், அன்புத்தம்பி விஜய் மற்றும் என்னை வாழ்த்திய அனைத்து மத்திய, மாநில அரசியல் நண்பர்களுக்கும் நன்றி.
திரையுலகத்திலிருந்து கமல்ஹாசன், வைரமுத்து, எஸ்.பி.முத்துராமன், விஜயகுமார், சத்யராஜ், பாலகிருஷ்ணா, ஷாருக்கான், அமீர்கான், பார்த்திபன், தனுஷ், சிவகார்த்திகேயன் மற்றும் அநேக நடிகர், நடிகைகள் திரையுலக தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள், ஊடக நண்பர்கள், தொலைக்காட்சியினர், கிரிக்கெட் வீரர்களுக்கும், அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும், அனைத்து துறைசார்ந்த என்னுடைய நலவிரும்பிகளுக்கும், என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகர்களுக்கும், தமிழக மக்களுக்கும், உலகெங்கும் இருக்கும் என்னுடைய ரசிகர்களுக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT