Published : 12 Dec 2024 12:40 AM
Last Updated : 12 Dec 2024 12:40 AM
கும்பகோணம்: பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, தாராசுரத்தில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: அடங்கமறு, அத்துமீறு என்பது விடுதலை சிறுத்தைகள் கட்சியில் தற்போது இல்லை. அண்மைக்காலமாக முதல்வர் ஸ்டாலின் முன்பு அடங்கிப் போ, குனிந்து போ, கூனிப் போ என்ற கொள்கைக்கு அந்தக் கட்சித் தலைவர் திருமாவளவன் மாறி விட்டார். அந்த கொள்கையை ஆதவ் அர்ஜுனா ஏற்க மறுத்தால், அவரை திருமாவளவன் கட்சியில் இருந்து நீக்கியுள்ளார்.
மழை பாதிப்பு குறித்து அரசு கவலைப்படாமல் இருந்தால், 2026 தேர்தலில் மக்கள் திமுக அரசை நீக்குவார்கள். தமிழகத்தில் மழை பாதிப்பு குறித்து மத்தியக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். பாதிப்பு குறித்த அறிக்கையை அளித்த பிறகு, மத்திய அரசு நிவாரணத்தொகையை வழங்கும். சூரியனார்கோயில் விவகாரத்தில் பல பிரச்சினைகள் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT