Published : 11 Dec 2024 02:59 AM
Last Updated : 11 Dec 2024 02:59 AM

அறநிலையத் துறையில் நடத்தப்பட்ட தணிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை: தணிக்கை அறிக்கையில் தகவல்

சென்னை: இந்து சமய அறநிலையத் துறை​யில் நடத்​தப்​பட்ட தணிக்கைக்கு, அந்த துறை ஒத்துழைப்பு வழங்​க​வில்லை என்று தணிக்கைத் துறை அறிக்கை​யில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இது தொடர்பாக தமிழ்​நாடு மாநில முதன்மை கணக்​காயர்கள் ஜெய்​சங்கர் (தணிக்கை-1), ஆனந்த் (தணிக்கை-2) ஆகியோர் சென்னை​யில் செய்தியாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: தமிழகத்​தில் சூரியசக்​தி​யுடன் கூடிய பசுமை வீடு திட்​டத்​தின் கீழ் தேர்வு செய்​யப்​பட்ட கிராமங்​களைச் சேர்ந்த ஊரக நலிவுற்​றோரில் 7.42 சதவீதம் பேர் மட்டுமே பயனடைந்​திருப்​ப​தால், பாதிப்புற்ற ஊரக நலிவுற்​றோருக்கு நிரந்தர வீடுகள் வழங்​கு​வ​தில் இந்த திட்டம் போதுமான தாக்​கத்தை ஏற்படுத்​தவில்லை.

மேலும், 2017-21-ம் ஆண்டு​களில் தேர்வு செய்​யப்​பட்ட 27 கிராம ஊராட்​சிகளில் 135 பேருக்கு கிராம சபைகளின் ஒப்புதல் இல்லாமலேயே வட்டார வளர்ச்சி அலுவலர்​களால் வீடுகள் ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டிருந்தன. அத்துடன், இந்த காலக்​கட்​டத்​தில் வீடுகள் ஒதுக்​கப்​பட்ட 88 பயனாளி​கள், அவற்றை கூடுதல் அறைகள், தரை மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்​து​மிடம் ஆகிய​வற்​றைக் கொண்ட பெரிய குடி​யிருப்பு​களாக விரிவுபடுத்தி இருந்​தனர். இதன் மூலம், இவர்கள் நலிவடைந்த ஊரக மக்கள் இல்லை என்பதும், வசதி வாய்ந்த பயனாளிகள் என்பதும், இந்த திட்​டத்தை தவறாக பயன்​படுத்தி இருந்​ததும் தெரிய​வந்​தது.

கோயில் சொத்துகள்: தமிழகத்​தில் இந்து சமய அறநிலையத் துறை​யின் கீழ் உள்ள கோயில்​களுக்கு சொந்​தமாக 4.78 லட்சம் ஏக்கர் நிலங்​களும், 22,600 கட்டிடங்​களும் உள்ளன. இந்த கட்டிடங்​களுக்கு 2022 ஜுலை 1 முதல் 2023 மார்ச் 21-ம் தேதி வரை ரூ.117.63 கோடி வாடகையாக வசூலிக்​கப்​பட்​டுள்​ளது. கோயில் சொத்துகள் தொடர்பாக துறை நிர்​வாகம் சரியாக இல்லாத​தால், கோயில் சொத்து​களுக்கு இழப்பு ஏற்படு​வதாக ஊடகங்​களில் செய்தி வெளி​யாகின. இதையடுத்து, 2022 மே மாதம் இது தொடர்பாக ஒரு இணக்கத் தணிக்கை மேற்​கொள்ள முடிவு செய்​யப்​பட்​டது. ஆனால், அறநிலையத் துறை போதிய ஆவணங்களை வழங்​க​வில்லை.

மேலும், துறை​களுக்கு ஒதுக்​கப்​பட்ட நிதி முழு​வதும் செலவழிக்​காமல், மொத்தம் ரூ.33,183 கோடி சேமிக்​கப்​பட்​டுள்​ளது. இதில், ஆயிரம் கோடி ரூபாய்க்​கும் அதிகமாக நிதி ஒதுக்​கப்​பட்டு, செலவிடப்​படாத துறை​களாக ஆதி திரா​விடர் மற்றும் பழங்​குடி​யினர் நலத் துறை, வீட்டு​வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்​சித் துறை, நக​ராட்சி நிர்​வாகம் மற்றும் குடிநீர் வழங்​கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை​கள் ​திகழ்​கின்றன. இவ்​வாறு அவர்​கள் தெரிவித்​தனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x