Published : 09 Dec 2024 10:42 AM
Last Updated : 09 Dec 2024 10:42 AM

மகளிர் நல திட்​டங்களை அறிய அரசின் உதவி எண் அறிவிப்பு

சென்னை: மகளிர் வாழ்​வாதார நலத்​திட்​டங்களை தெரிந்​து ​கொள்​வதற்கான உதவி எண்ணை, தமிழக அரசு அறிவித்​துள்ளது.

தமிழக அரசின் சார்​பில் தமிழ்​நாடு மகளிர் மேம்​பாட்டு நிறு​வனத்​தின்​கீழ் தமிழ்​நாடு ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்​வாதார இயக்​ககங்கள் மற்றும் வாழ்ந்து காட்டு​வோம் திட்டம் மூலம் பல்வேறு நலத்​திட்​டங்கள் மகளிருக்காக செயல்​படுத்​தப்​பட்டு வருகின்றன. அதில் பால்வள மையம், மாதவிடாய் சுகாதார மேலாண்மை மன்றங்கள், அறிவுசார் மையங்கள் மூலம் அளிக்​கப்​படும் பயிற்சிகள், சமுதாய பண்ணைப் பள்ளி​கள், சமுதாய திறன் பள்ளிகள் மூலம் வழங்​கப்​படும் பயிற்சிகள் குறிப்​பிடத்​தக்கவை.

அதேபோல் மகளிர் சுய உதவி குழுக்​களுக்கு வழங்​கப்​படும் கடனுதவி​கள், நகர்ப்புற இளைஞர்​களுக்காக மத்திய அரசின் கிராமப்புற மேம்​பாட்டு அமைச்​சகத்​தின்​கீழ் தீன் தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் பயிற்சி திட்​டம், வேலை​வாய்ப்பு முகாம்​கள், இளைஞர் திறன் விழாக்கள் போன்ற​வை​யும் நடைமுறைப்​படுத்​தப்​பட்டு வருகின்றன.

அந்தவகை​யில் மகளிர் வாழ்​வா​தாரம் தொடர்பான வாய்ப்பு​கள், நலத்​திட்​டங்​கள், நல உதவிகள் குறித்த வழிகாட்டு​தல்களை பெறவும், தமிழ்​நாடு மகளிர் மேம்​பாட்டு நிறு​வனத்​தின் திட்​டங்கள் குறித்து ஆலோசனைகள் மற்றும் புகார்கள் தெரிவிக்​க​வும் வாழ்​வாதார உதவி அழைப்பு எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி பொது அலுவலக வேலை நாட்​களில் காலை 9.30 முதல் மாலை 6.30 மணி வரையில் 155330 என்ற எண்ணை தொடர்பு ​கொண்டு ஆலோசனைகளை பெற்றுக்​கொள்​ளலாம்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x