Published : 09 Dec 2024 07:25 AM
Last Updated : 09 Dec 2024 07:25 AM

தமிழகத்தில் சீசன் முடிந்தும் காற்றாலைகளில் இருந்து கூடுதல் மின்சாரம்

சென்னை: தமிழகத்​தில் சீசன் முடிந்த பிறகும் காற்​றாலைகளில் இருந்து கூடுதல் மின்​சாரம் கிடைப்​ப​தால், அனல் மின் உற்பத்​தியை மின்​வாரியம் குறைத்​துள்ளது.

தமிழகத்​தில் 9,150 மெகாவாட் திறனில் பல்வேறு தனியார் நிறு​வனங்​களுக்கு சொந்​தமான காற்​றாலை மின்​நிலை​யங்கள் உள்ளன. அந்த நிறு​வனங்கள் இங்கு உற்பத்​தி​யாகும் மின்​சா​ரத்தை மின்​வாரி​யத்​துக்கு விற்பனை செய்​வதுடன், சொந்த பயன்​பாட்டுக்​கும் பயன்​படுத்தி வருகின்றன.

கடந்த மே முதல் செப்​டம்பர் வரை காற்​றாலை சீசன். இந்த காலத்​தில் காற்​றாலைகளில் இருந்து தினமும் சராசரியாக 8 கோடி முதல் 10 கோடி யூனிட் மின்​சாரம் கிடைக்​கும். கடந்த அக்டோபர் முதல் காற்றின் வேகம் குறைந்​த​தால் காற்​றாலைகளில் இருந்து தினசரி 1 கோடி யூனிட் மின்​சா​ரம்கூட கிடைக்க​வில்லை.

இந்நிலை​யில், சமீபத்​தில் கரையை கடந்த ஃபெஞ்சல் புயல் காரண​மாக, கடந்த சில நாட்​களாக காற்​றாலைகளில் இருந்து அதிக அளவில் மின்​சாரம் கிடைக்கிறது. அதன்​படி, கடந்த 30-ம் தேதி 3 கோடி யூனிட், டிசம்பர் 1-ம் தேதி 5.56 கோடி யூனிட், 2-ம் தேதி 5.88 கோடி யூனிட் மின்​சாரம் கிடைத்துள்ளது. இதனால், காற்​றாலை உற்பத்​தி​யாளர்கள் மகிழ்ச்சி அடைந்​துள்ளனர்.

மேலும், இந்த மின்​சா​ரத்தை முழு​மையாக பயன்​படுத்து​வதற்காக அனல் மின் உற்பத்தி மற்றும் மின்​கொள்​முதலை மின்​வாரி​யம் குறைத்​துள்ளதாக அதிகாரி​கள் தெரி​வித்​தனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x