Published : 09 Dec 2024 06:36 AM
Last Updated : 09 Dec 2024 06:36 AM

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மூலம் 11.48 லட்சம் மகளிருக்கு நிதிசார் கல்வி பயிற்சி

சென்னை: தமிழ்​நாடு மகளிர் மேம்​பாட்டு நிறு​வனம் மூலம் 11.48 லட்சம் மகளிருக்கு நிதிசார் கல்வி பயிற்சி வழங்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

மகளிர் சுய உதவிக் குழு​வினர்களுக்கு நிதி கல்வியறிவை மேம்படுத்​துதல், வங்கி சேமிப்பு கணக்கை தொடங்​குதல், வங்கி கடன் பெறு​வதற்கான வழிவகைகள், காப்​பீடு, ஓய்வூதிய சேவைகள் போன்ற நிதி சேவைகளை வழங்​கு​வதற்காக தமிழ்​நாடு மகளிர் மேம்​பாட்டு நிறு​வனம் மூலம் நிதிசார் கல்வி திட்டம் தொடங்​கப்​பட்​டது. நிதிசார் கல்வி​யானது மகளிர் சுய உதவிக்​குழு உறுப்​பினர்​களுக்​கும், ஏழை மற்றும் பாதிக்​கப்​படக் கூடிய நிலை​யில் உள்ள குடும்பத்​தினருக்​கும் நிதி சார்ந்த விழிப்பு​ணர்வை வழங்​குவதை நோக்​க​மாகக் கொண்​டுள்​ளது.

நிதிசார் திறனை வளர்ப்​பது, திட்ட மானி​யங்​கள், வட்டி மானி​யம், வங்கி கடன் என பல்வேறு நிதி சேவைகளை சுய உதவிக் குழு உறுப்​பினர்கள் எளிதில் அணுகு​வதற்கு இத்திட்டம் வழிவகை செய்​கிறது.

இதற்காக சிறப்பு முகாம்​களும் நடத்​தப்​படு​கின்றன. அந்த வகை​யில் மகளிர் சுய உதவிக்​குழு உறுப்​பினர்கள் நிதி சார்ந்த விழிப்பு​ணர்வை பெறும் வகையில் 11.48 லட்சம் மகளிருக்கு நிதிசார் கல்வி குறித்த பயிற்சிகளை வழங்க ரூ.4.50 கோடி நிதியை தமிழக அரசு மூலம் ஒதுக்​கீடு செய்யப்பட்டுள்​ளது.

அதன்படி இதுவரை மொத்தம் 2.33 லட்சம் சுய உதவிக் குழு மகளிருக்கு நிதிசார் கல்வி பயிற்சிகள் அளிக்​கப்​பட்​டுள்ளன. மீதமுள்ள மகளிருக்​கும் வரும் டிச.31-ம் தேதிக்​குள் பயிற்சிகளை நிறைவு செய்​யு​மாறு துணை முதல்வர் உதயநிதி ஸ்டா​லின் அறிவுறுத்​தி​யுள்​ளார். அதற்கான பணி​கள் தமிழ்​நாடு மகளிர் மேம்​பாட்டு நிறு​வனம் சார்​பில் ​முன்னெடுக்​கப்​பட்டு வரு​கின்​றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x