Published : 08 Dec 2024 08:16 AM
Last Updated : 08 Dec 2024 08:16 AM

மேட்​டூர் அணைக்கு நீர்​வரத்து 9,601 கனஅடியாக சரிவு

மேட்​டூர்: மேட்​டூர் அணைக்கு நீர்​வரத்து விநாடிக்கு 9,601 கனஅடியாக சரிந்​துள்ளது.

காவிரி நீர்ப்​பிடிப்புப் பகுதி​களில் பெய்​யும் மழையைப் பொறுத்து மேட்​டூர் அணைக்கு நீர்​வரத்து இருக்​கும். தற்போது காவிரி நீர்ப்​பிடிப்புப் பகுதி​களில் மழை குறைந்​துள்ளள​தால், அணைக்கு நீர்​வரத்து சரியத் தொடங்​கி​யுள்​ளது.

மேட்டூர் அணைக்கு நேற்று முன்​தினம் விநாடிக்கு 14,404 கனஅடியாக இருந்த நீர்​வரத்து நேற்று 9,601 கனஅடியாக சரிந்​தது. அணையி​ல் இருந்து காவிரி டெல்டா பாசனத்​துக்கு விநாடிக்கு 1,000 கனஅடி, கால்​வாய் பாசனத்​துக்கு 300 கனஅடி வீதம் தண்ணீர் வெளி​யேற்​றப்​பட்டு வருகிறது.

அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவைக் காட்டிலும், நீர் வரத்து அதிகமாக உள்ள​தால் அணை நீர்​மட்டம் உயர்ந்து வருகிறது. அணையின் நீர்​மட்டம் நேற்று 115.78 அடியாக​வும், நீர் இருப்பு 86.88 டிஎம்​சி​யாக​வும் இருந்​தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x