Published : 07 Dec 2024 06:25 AM
Last Updated : 07 Dec 2024 06:25 AM
சென்னை: மாநில சைபர் க்ரைம் கூடுதல் டிஜிபி சந்தீப் மித்தல் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
வேலை தருவதாக இணையம் மூலமாக விளம்பரம் செய்து, அதை நம்பி வரும் மக்களை, தங்களின் இடத்துக்கோ அல்லது தங்களின் நாட்டுக்கோ வரவழைத்து, அம்மக்களை ‘சைபர் க்ரைம்' உள்ளிட்ட குற்றச்செயல்களில் சிலர் ஈடுபடுத்து கின்றனர். அப்படி பாதிக்கப்பட் டவர் ‘சைபர் அடிமைகள்’ என்று வகைப்படுத்தப்படுகிறார்கள்.
குறிப்பாக இந்தியாவிலிருந்து, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் டேட்டா என்ட்ரி மற்றும் கால் சென்டர்கள் போன்ற வேலைகளுக்கு அங்கீகரிக்கப்படாத மனித வள ஏஜென்சிகளால் சட்டவிரோதமாக ஆட்சேர்ப்பு செய்யப்படுகிறது. பின்னர் இவர்களை இந்தியாவில் சைபர் குற்றங்களை நடத்த அந்த நாட்டு சைபர் மோசடி பேர்வழிகள் பயன்படுத்துகின்றனர். இதுபோன்ற அங்கீகரிக்கப்படாத ஆட்சேர்ப்பு முகமை களுக்கு எதிராக பல புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
எனவே, இதுபோன்ற மோசடி களில் யாரும் சிக்கிக் கொள்ளாமல் விழிப்புடன் இருக்க வேண்டும். மேலும், இத்தகைய மோசடிகளுக்கு ஆளாகி இருந்தால் அல்லது சந்தேகத்துக்கிடமான செயலை சந்தித்திருந்தால், சைபர் க்ரைம் கட்டணமில்லா தொலைபேசி எண் 1930-ஐ அழைத்து அதில் புகார் தெரிவிக்கலாம். அல்லது www. cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகாரை பதிவு செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT