Last Updated : 06 Dec, 2024 07:53 PM

2  

Published : 06 Dec 2024 07:53 PM
Last Updated : 06 Dec 2024 07:53 PM

"டெல்லியில் அதானிக்கு எதிரான போராட்டத்தில் திமுக பங்கேற்காதது ஏன்?” - ஹெச்.ராஜா கேள்வி

காரைக்குடி: “டெல்லியில் அதானிக்கு எதிரான போராட்டத்தில் திமுக பங்கேற்காதது ஏன்?” என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பினார்.

காரைக்குடியில் அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி அவரது சிலைக்கு ஹெச்.ராஜா தலைமையில் பாஜகவினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பின்னர் ஹெச்.ராஜா செய்தியாளர்களிடம் கூறியது: ''அரசியலமைப்பு சட்டத்தில் 370-வது பிரிவை அம்பேத்கர் ஆதரிக்கவில்லை. அவர் மீது மரியாதை செலுத்துவோரும் இந்த பிரிவை ஆதரிக்க மாட்டர். கடந்த 1975-ம் ஆண்டு காங்கிரஸ் அரசியலமைப்பு சட்டத்தை முடக்கி சர்வாதிகார ஆட்சி செய்தது. அதற்கு பாவ பரிகாரமாக தான் அரசியலமைப்பு சட்ட புத்தகத்தை தற்போது காங்கிரஸார் கையில் வைத்துக் கொண்டு திரிகின்றனர். இது ஒரு நாடகம்.

தமிழகத்தில் அனைத்து துறையிலும் தோற்றுபோன மனித முகமற்ற ஆட்சி இருப்பது துரதிருஷ்டவசமானது. சென்னையில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்ததில் 3 பேர் உயிரிழந்தனர். 42 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இத்தகைய மோசமான நிர்வாகத்தை வைத்துக் கொண்டு, அமைச்சர் அன்பரசு அகம்பாவத்தோடு பேசியுள்ளார். அமைச்சருக்கு தெரியாமலா ரூ.10 பிளிச்சிங் பவுடரை ரூ.55-க்கு வாங்கியுள்ளனர்.

திருவண்ணாமலையில் மண் சரிவால் உயிரிழந்த சம்பவம் கவலை அளிக்கிறது. விதிமீறி கட்டிடங்கள் கட்டியதால் வயநாட்டை போன்று திருவண்ணாமலையிலும் மண் நகர ஆரம்பிக்கிறது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். திமுக அரசு நெறிமுறை இல்லாத அரசாக அரசு உள்ளது. இதற்கு வருகிற தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவர்.

டெல்லியில் அதானிக்கு எதிராக நடந்த போராட்டத்தில் திமுக கலந்து கொள்ளாதது ஏன்? நாட்டில் மக்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்கும் அனைத்து கார்ப்பரேட் நிறுவனங்களும் நண்பர்கள்தான். மணிப்பூருக்கு பிரதமர் ஏன் போகவில்லை என்று கேட்கும் நீங்கள், கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய உயிரிழப்பு சம்பவத்துக்கு முதல்வர் ஸ்டாலின் போகாதது ஏன் என்று கேட்கவில்லை. தமிழகத்தில் வெள்ளப் பாதிப்புகளில் தமிழக அரசு காவி சாயம் பூசாமல் நடவடிக்கை எடுக்க விஜய் கூறிய கருத்து சரியானது. வெள்ளப் பாதிப்பில் தமிழக அரசு செவிடன் காதில் ஊதிய சங்கு போல் செயல்பட்டதால் பொறுமை இழந்த மக்கள் அமைச்சர் பொன்முடி மீது சகதியை வீசினர்” என்று அவர் கூறினார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x