Last Updated : 06 Dec, 2024 01:32 PM

4  

Published : 06 Dec 2024 01:32 PM
Last Updated : 06 Dec 2024 01:32 PM

பொன்முடிக்கு எதிராக ஏன் இத்தனை பொல்லாப்பு? - சேறு வீசிய விவகாரத்தின் பின்னணி

விழுப்புரம் அருகேயுள்ள இருவேல்பட்டு கிராமத்தில் கடந்த 3-ம் தேதி புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சென்ற அமைச்சர் பொன்முடி மற்றும் விழுப்புரம் ஆட்சியர் பழனி உள்ளிட்டோர் மீது ஒரு பெண் உட்பட இருவர் சேற்றை வாரி வீசியது பெரும் சர்ச்சையானது.

இது குறித்து செய்தி​யாளர்​களிடம் பேசிய பொன்முடி “அரசியல் செய்வதற்காக எனக்குப் பின்புறம் சேற்றை வீசி அடித்​துள்ளனர். இது குறித்து சமூகவலை​தளத்தில் யார் பதிவிட்டாரோ அவரது கட்சியைச் சேர்ந்​தவர்களே இந்தக் காரியத்தைச் செய்துள்ளனர். எனினும் நாங்கள் இதனைப் பெரிதுபடுத்தி அரசிய​லாக்க விரும்ப​வில்லை” என்று சாந்த​மாகச் சொன்னார். பொன்முடி அப்படி சுட்டிக்​காட்​டியது பாஜகவினரைத்​தான்.

இந்நிலை​யில், 4ம் தேதியும் திருவெண்​ணெய்​நல்லூர் கடை வீதியிலும், சின்ன செவலை கிராமத்தில் மழவராயநல்லூர் கிராம மக்களும், அரகண்​டநல்​லூரிலும் சாலை மறியலில் ஈடுபட்​டனர். வெள்ள நிவாரணம் கேட்டு நேற்று மட்டும் நான்கு இடங்களில் சாலை மறியல் நடைபெற்றது. இதில் 3 இடங்கள் அமைச்சர் பொன்முடியின் தொகுதிக்​குட்​பட்டவை.

மாவட்​டத்தில் உள்ள 7 தொகுதி​களில் 4 தொகுதிகள் திமுக வசம் உள்ள நிலையில் பொன்முடியின் திருக்​கோ​விலூர் தொகுதியில் மட்டும் ஏன் இத்தனை போராட்​டங்கள்? இது தொடர்பாக கடந்த தேர்தலில் பொன்முடியை எதிர்த்துப் போட்டி​யிட்ட விழுப்புரம் கிழக்கு மாவட்ட பாஜக தலைவரான வி.ஏ.டி.கலிவரதனிடம் கேட்ட​போது, “முன்பு விழுப்புரம் தொகுதியில் பொன்முடி வென்றபோது ஆட்சியர் பெருந்​திட்ட வளாகம், மருத்​துவக்​கல்​லூரி, அண்ணா பொறியியல் கல்லூரி உள்ளிட்​ட​வற்றைக் கொண்டு​வந்​தார். ஆனால், திருக்​கோ​விலூர் தொகுதியில் 2 முறை வென்றும் இங்கு சொல்லிக்கொள்ளும்படி அவர் எதுவும் செய்ய​வில்லை.

அதனால் அவர் மீது தொகுதி மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். மேலும், மாவட்ட திமுக பொறுப்​பாளராக தனது மகன் கவுதமசி​காமணியை அவர் கொண்டு வந்ததை திமுக​வினரே ரசிக்க​வில்லை. எப்போதுமே அமைச்சர் பொன்முடி சர்ச்​சைகளில் சிக்கு​வதற்கு அவரது முன் கோபம் தான் காரணம்.

இதுவே அவருக்கு பகையாக மாறி வருகிறது. சேற்றை வீசிய பெண்மணி விஜயராணி கடந்த 2 ஆண்டு​களுக்கு முன்பு பாஜக மாவட்ட செயற்குழு உறுப்​பினராக இருந்​தார். தற்போது கட்சியில் அவர் ஆக்டிவாக இல்லை. தற்போது சென்னையில் உள்ள அவர் ஏன் இங்கு வந்தார் எனத் தெரிய​வில்லை. மற்றொருவரான ராமர் என்கிற ராமகிருஷ்ணன் பாஜககாரரா என்றே தெரிய​வில்லை.

அமைச்சர் பொன்முடி வந்தபோது அந்த நபர் அவரை நெருங்கி குறைகளைச் சொல்ல முயன்​றுள்​ளார். அப்போது பொன்முடியின் நேர்முக உதவியாளர் அவரை தள்ளி​விட்​டுள்​ளார். அந்த ஆத்திரத்தில் அந்த நபர் அள்ளி வீசிய சேறு, அமைச்சர் மீது தெறித்​த​தாகக் கூறுகிறார்கள். ஆக, இது திட்ட​மிட்டு நடக்க​வில்லை. இருந்தபோதும் தன்னை எதிர்த்து போட்டி​யிட்டது பாஜக என்பதால் பொன்முடி இப்படி எங்கள் மீது வெறுப்பைக் காட்டு​கிறார்” என்றார்.

இதனிடையே, தன் மீது சேறு வீசப்பட்ட விவகாரத்தை அரசிய​லாக்க விரும்ப​வில்லை என்று பொன்முடி கூறினாலும், ஆட்சியர் மற்றும் திருவாரூர் எஸ்பி-யான ஜெயக்​குமார் உள்ளிட்டோர் மீதும் சேறு தெறித்​திருப்​பதால் விஏஓ மூலம் புகார் பெற்று வழக்குப் பதிவு செய்யும் முடிவில் போலீஸ் இருப்​ப​தாகத் தெரிகிறது!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x