Last Updated : 05 Dec, 2024 01:01 PM

1  

Published : 05 Dec 2024 01:01 PM
Last Updated : 05 Dec 2024 01:01 PM

டிவி நிகழ்ச்சியில் அரசுக்கு கோரிக்கை வைத்த திண்டிவனம் மாணவி: நிறைவேற்றிய அமைச்சர்

திண்டிவனம் அருகே தொடங்கப்பட்ட இலவசப் பேருந்தில் முதல் பயணியாக கோரிக்கை வைத்த மாணவி தரஷிணி ஏறுகிறார். அருகில்அமைச்சர் சிவசங்கர் உள்ளிட்டோர் உள்ளனர்.

விழுப்புரம்: திண்டிவனம் அடுத்த அம்மணம்பாக்கம் கிராமத்தில் வசிக்கும் 8 ஆம் வகுப்பு மாணவி, தங்களின் கிராமத்துக்கு போக்குவரத்து வசதியினை ஏற்படுத்தித் தருமாறு அரசுக்கு கோரிக்கை வைத்திருந்த நிலையில், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அதை நிறைவேற்றியுள்ளார்.

திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் அம்மணம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த அரசு பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார் தர்ஷினி. இவர் கடந்த மாதம் தனியார் தொலைக்காட்சி பாட்டு போட்டியில் கலந்து கொண்டு பாடலை பாடி அனைவரையும் கவர்ந்தார். அப்போது பள்ளிக்கு சென்று படிப்பதற்கு அம்மணம்பாக்கம் - அனந்தமங்கலம் வரையிலான போக்குவரத்து வசதியினை ஏற்படுத்தித் தருமாறு அந்நிகழ்ச்சியின் வாயிலாக தமிழக அரசிடம் கோரிக்கையாக கேட்டுக்கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அச்சிறுமியின் கோரிக்கையை ஏற்று உடனடியாக அம்மணம்பாக்கம் -அனந்தமங்கலம் வரையிலான இலவச பேருந்து போக்குவரத்து வசதியினை ஏற்படுத்தித் தரும்படி உத்தரவிட்டார். ,இதனைத் தொடர்ந்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் இன்று காலை அம்மணம்பாக்கம் - அனந்தமங்கலம் வரையிலான இலவச பேருந்து போக்குவரத்து வசதியை சிறுமி தர்ஷினியை முன்னிறுத்தி தொடங்கி வைத்தார்.

அப்போது விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் டாக்டர்.சேகர்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சேதுநாதன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x