Published : 04 Dec 2024 06:05 AM
Last Updated : 04 Dec 2024 06:05 AM

ராம்கோ சூப்​பர்​கிரீட், ‘இந்து தமிழ் திசை’ சார்​பில் சீர்​மிகு பொறியாளர் விருது வழங்​கும் விழா

சென்னை: கட்டு​மானம், கட்டமைப்​பில் சிறப்பான முறை​யிலும், தனித்து​வத்​துடனும் செயலாற்றி வரும் பொறி​யாளர்களை கவுரவிக்​கும் வகையில் ராம்கோ சூப்​பர்​கிரீட் சிமென்ட் வழங்​கும் ‘இந்து தமிழ் திசை’ - ‘சீர்​மிகு பொறி​யாளர் விருது’, ‘வளர்​மிகு பொறி​யாளர் விருது’, ‘திறன்​மிகு பொறி​யாளர் விருது - 2024’ ஆகியவை வழங்​கப்​பட​வுள்ளன.

சென்னை தி.நகரில் உள்ள வாணி மஹாலில் நாளை (டிச. 5) மாலை 4 மணிக்கு நடைபெற உள்ள இந்நிகழ்வை ரினா​கான் ஏ.ஏ.சி. ப்ளாக்ஸ், டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பல்கலைக்​கழகம் ஆகியவை இணைந்து வழங்​கு​கின்றன.

இந்த விருதுக்கு தமிழகம் மற்றும் புதுச்​சேரியைச் சேர்ந்த 300-க்​கும் மேற்​பட்ட பொறி​யாளர்கள் விண்ணப்​பித்து இருந்தனர். முதல்​கட்​டத்​தில் தேர்வான 96 பொறி​யாளர்​களுக்கு ஆன்லைன் வழியாக நேர்​காணல் நடைபெற்​றது. தொடர்ந்து, ‘சீர்​மிகு பொறி​யாளர் விருது’, ‘வளர்​மிகு பொறியாளர் விருது’, ‘திறன்​மிகு பொறி​யாளர் விருது - 2024’ ஆகிய​வற்றுக்கு 62 பொறி​யாளர்கள் தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x