Published : 03 Dec 2024 06:57 AM
Last Updated : 03 Dec 2024 06:57 AM

அனைத்து மகளிர் குழு உறுப்​பினர்​களும் முதல்​வரின் காப்​பீட்டு திட்டத்​தில் இணைந்து பயனடைய அறிவுறுத்தல்

சென்னை: அனைத்து மகளிர் சுயஉதவிக் குழு உறுப்​பினர்​களும் முதல்​வரின் காப்​பீட்டுத் திட்​டத்​தில் இணைந்து பயன்​பெறு​மாறு தமிழ்​நாடு மகளிர் மேம்​பாட்டு நிறு​வனம் அறிவுறுத்​தி​யுள்​ளது.

முதல்​வரின் விரிவான மருத்​துவக் காப்​பீட்டுத் திட்டம் கடந்த 2009-ல் ‘கலைஞர்’ காப்​பீட்டுத் திட்டமாக தொடங்​கப்​பட்​டது. இப்போது ஜனவரி 2022 முதல் 2027 வரையிலான திட்டம் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறு​வனம் மூலம் செயல்​படுத்​தப்​பட்டு வருகிறது. இதன்​மூலம் அனைத்து அங்கீகரிக்​கப்​பட்ட மருத்​துவ​மனை​களி​லும் பணிபுரி​யும் மருத்​துவக் காப்​பீட்டு ஒருங்​கிணைப்​பாளர்கள் மூலம், மருத்​துவக் காப்​பீட்டு அட்டையை சரிபார்த்து பயனாளிகள் சிகிச்சை பெற்று​வரு​கின்​றனர்.

அந்தவகை​யில் முதல்​வரின் விரிவான மருத்துவ காப்​பீட்டுத் திட்​டத்​தில் அனைத்து மகளிர் சுய உதவிக் குழு உறுப்​பினர்​களும் இணைந்து பயனடை​யு​மாறு தமிழ்​நாடு மகளிர் மேம்​பாட்டு நிறு​வனம் அறிவுறுத்​தி​யுள்​ளது. ஆண்டு வருமானம் ரூ.1.20 லட்சத்துக்கு குறைவான குடும்​பங்கள் இத்திட்​டத்​தின் மூலம் காப்​பீட்டுத் தொகையாக ரூ.5 லட்சம் வரையும், உயர் சிகிச்​சைக்கான காப்​பீட்டு தொகையாக ரூ.22 லட்சம் வரையும் பயன்​படுத்​திக் கொள்​ளலாம்.

இத்திட்​டத்​தில் ஏற்கெனவே பதிவு செய்திருந்த மகளிர் சுயஉதவிக் குழு​வினர் www.cmchistn.com என்ற இணையதளத்​தில் குடும்ப அட்டை விவரத்தை உள்ளீடு செய்து பதிவு நிலையை தெரிந்து கொள்​ளு​மாறு கேட்டுக்​ கொள்​ளப்​படு​கிறது. புதிதாக பதிவு செய்​பவர்கள் தேவையான ஆவணங்​களுடன் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவல​கங்​களில் இயங்கி வரும் முதல்​வரின் விரிவான மருத்​துவக் காப்​பீட்டுத் திட்ட மையத்​தில் சென்று பதிவு செய்ய வேண்​டும். கூடுதல் விவரங்​களுக்கு 18004253993 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்​ளலாம் என தமிழக அரசு தெரி​வித்​துள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x