Published : 02 Dec 2024 02:13 AM
Last Updated : 02 Dec 2024 02:13 AM

குரு சிஷ்யா உறவு முறை தான் கலைஞர்களை​ ​உயிரோட்டமாக வைத்திருக்கிறது: தலைமை நீதிபதி கே.ஆர்​.ஸ்ரீராம் பெருமிதம்

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் மற்றும் அவரது சகோதரியான பெங்களூரு ஆத்மாலயா அகாடமியின் நிர்வாகியான பரத நாட்டியக் கலைஞர் டாக்டர் பத்மஜா வெங்கடேஷ் சுரேஷ் ஆகியோர் தங்களது தந்தை மறைந்த கூத்து கலைஞர் சாக்யார் ராஜன் நினைவு விருதை கொச்சி பூஜா கொட்டு கலைஞரான ஸ்ரீ கே.என். கிருஷ்ணா குறுப்புக்கு வழங்கி கவுரவித்தனர்.

சென்னை: குரு சிஷ்யா உறவு முறை தான் இசைக்​கலைஞர்​களை​யும், கலையை​யும் என்றென்​றும் உயிரோட்​டமாக வைத்​திருக்​கிறது என சென்னை உயர் நீதி​மன்ற தலைமை நீதிபதி கே.ஆர்​.ஸ்ரீராம் பெரு​மிதம் தெரி​வித்​தார்.

சென்னை உயர் நீதி​மன்ற தலைமை நீதிபதி கே.ஆர்​.ஸ்ரீராம் மற்றும் அவரது சகோதரியான பெங்​களூரு ஆத்மாலயா அகாட​மி​யின் நிர்​வாகியான பரத நாட்​டியக் கலைஞர் டாக்டர் பத்மஜா வெங்​கடேஷ் சுரேஷ் ஆகியோரது தந்தை மறைந்த கூத்து கலைஞர் சாக்​யார் ராஜன் நினைவாக இசைக்​கலைஞர்​களுக்கு விருது வழங்​கும் விழா சென்னை ஆழ்வார்​பேட்டை நாரத கான சபாவில் நடைபெற்​றது.

இந்நிகழ்​வில் பங்கேற்ற உயர் நீதி​மன்ற தலைமை நீதிபதி கே.ஆர். ஸ்ரீராம், தனது தந்தை மறைந்த சாக்​யார் ராஜன் நினைவு விருதை கொச்​சி​யைச் சேர்ந்த பூஜா கொட்டு கலைஞரான ஸ்ரீ கே.என். கிருஷ்ணா குறுப்​புக்கு வழங்கி கவுர​வித்​தார். அதே போல டாக்டர் ராஜாராம் சாஸ்​திரிவிருது சமஸ்​கிருத வேதக்​கலைஞர் டாக்டர் கிருஷ்ண​மூர்த்தி சாஸ்​திரி​களுக்​கும், மெலட்​டூர் ஸ்ரீ எஸ். நடராஜன் நினைவு விருது இசை மற்றும் நடனக் கலைஞர் ஸ்ரீ ஜெயராம் கணேசனுக்​கும், ஆத்மாலயா சிறப்பு விருது மிருதங்க கலைஞர் தஞ்சாவூர் வி.பத்​மாவுக்​கும் வழங்கி கவுர​வித்​தார். பின்னர் தலைமை நீதிபதி கே.ஆர். ஸ்ரீராம் பேசுகை​யில், ‘‘இசைக்​கலைஞர்கள் மூலமாகத்​தான் கலை இன்றும் வாழ்ந்து வருகிறது. குரு சிஷ்யா உறவு முறை எதிர்கால சந்த​தி​யினரிட​மும் பாரம்​பரியமாக தொடரவேண்​டும். ஏனென்​றால் அந்த குரு சிஷ்யா உறவு முறை தான் இசைக்​கலைஞர்​களை​யும், கலையை​யும் என்றென்​றும் உயிரோட்​டமாக வைத்​திருக்​கிறது’ என பெரு​மிதம் தெரி​வித்​தார்.

இந்நிகழ்​வில் டாக்டர் பத்மஜா சுரேஷ் எழுதிய ‘நடன தந்திரங்கள் மற்றும் சத்குரு’ என்ற நூலை மையமாகக் கொண்டு ஸ்ரீதர்ஷன் சங்கர் குழு, சாந்​தாலா நாட்​டி​யாலயா ரேகா அசோக் ஹெக்டே குழு, ஸ்ரீ ரமண மகரிஷி மையம் ஸ்ரீ சாரதா நடராஜன் குழு, ஆத்மாலயா அகாடமி டாக்டர் பத்மஜா சுரேஷ் குழு​வினரின் பரதநாட்​டி​யம் நிகழ்ச்சி நடை​பெற்​றது. சர்​வேஷ் வெங்​கடேஷ் பாடி​னார். நிகழ்ச்​சிக்கான ஏற்​பாடுகளை டாக்​டர்​ பத்மஜா சுரேஷ் செய்திருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x