Published : 02 Dec 2024 01:02 AM
Last Updated : 02 Dec 2024 01:02 AM

பாதுகாப்பு மையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய துணை முதல்வர்

கடலூர் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். உடன், அமைச்சர்கள் பொன்முடி, எம்ஆர்கே.பன்னீர்செல்வம், சி.வெ.கணேசன், எஸ்.எஸ்.சிவசங்கர் உள்ளிட்டோர்.

கடலூர் / விழுப்புரம்: ஃபெஞ்சல் புயல் காரணமாக கடலூர் மாவட்​டத்​தில் வெள்ளம் சூழ்ந்த குடி​யிருப்பு​களில் இருந்த பொது​மக்கள் மீட்​கப்​பட்டு, பாது​காப்பு மையங்​களில் தங்கவைக்​கப்​பட்​டுள்​ளனர். அவர்​களுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டா​லின் நேற்று நிவாரணப் பொருட்களை வழங்​கினார்.

ஃபெஞ்சல் புயல் காரணமாக கடந்த இரண்டு நாட்​களாக பெய்த கனமழை​யால் தாழ்வான பகுதி​களில் வெள்​ளப்​பெருக்கு ஏற்பட்​டுள்​ளது. வெள்ளம் சூழ்ந்த குடி​யிருப்பு​களில் வசிக்​கும் பொது​மக்கள் மீட்​கப்​பட்டு, நிவாரண முகாம்​களில் தங்க வைக்​கப்​பட்​டுள்​ளனர். இதன்​படி, கடலூர் மாவட்​டத்​தில் 17 நிவாரண முகாம்​களில், 703 பேர் பாது​காப்பாக தங்க வைக்​கப்​பட்​டுள்​ளனர். அவர்​களுக்கு உணவு மற்றும் அத்தி​யா​வசியப் பொருட்கள் வழங்​கப்​பட்​டுள்ளன.

இந்நிலை​யில், தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டா​லின், கடலூர் புருஷோத்​தம்மன் நகர் பகுதி​யில் தேங்​கி​யுள்ள மழைநீர் அகற்றும் பணியை நேற்று பார்​வை​யிட்டு, அந்தப் பணியை விரைந்து முடிக்​கு​மாறு அதிகாரி​களுக்கு அறிவுறுத்​தினார்.

தொடர்ந்து, கடலூர் கந்தசாமி நாயுடு மகளிர் கலைக் கல்லூரி​யில் அமைக்​கப்​பட்​டுள்ள பாது​காப்பு மையத்​தில் தங்க வைக்​கப்​பட்​டுள்ள 256 பேருக்கு பிஸ்​கெட், பால், அரிசி, பிரட் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்​கினார். மேலும், பல்வேறு பகுதி​களில் தேங்​கி​யுள்ள மழைநீரை அகற்றி, போக்கு​வரத்தை சீரமைக்​கு​மாறு துறை அலுவலர்​களுக்கு உத்தர​விட்​டார்.

அமைச்​சர்கள் எம்ஆர்​கே.பன்னீர்​செல்​வம், சி.வெ.கணேசன், பொன்​முடி, எஸ்.எஸ்​.சிவசங்​கர், செந்​தில் பாலாஜி, எம்எல்​ஏக்கள் கோ.ஐயப்​பன், சபா.ராஜேந்​திரன், கடலூர் மேயர் சுந்தரி ராஜா, ஊரக வளர்ச்​சித் துறைச் செயலர் ககன்​தீப் சிங் பேடி, மாவட்ட கண்காணிப்பு அலு​வலர் ராமன், ஆட்சி​யர் ஆ​தித்யா செந்​தில்​கு​மார், துணை மேயர் ​தாமரைச்​செல்​வன் உடனிருந்​தனர்​.

நரிக்குறவர்கள் கோரிக்கை: முன்ன​தாக, விழுப்புரம் மாவட்டம் மரக்​காணம் வந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டா​லின், அங்குள்ள அரசுப் பள்ளி​யில் தங்கி​யிருந்த நரிக்​குறவர்​களுக்கு வேட்டி, சேலை மற்றும் உணவு உள்ளிட்​ட​வற்றை வழங்​கினார். அப்போது நரிக்​குறவர்​கள், தங்களுக்கு நிலப்​பட்டா வழங்கி, கான்​கிரீட் வீடு கட்டிக் கொடுக்​கு​மாறு வலியுறுத்​தினர். உரிய நடவடிக்கை எடுப்​பதாக துணை முதல்வர் உறுதி​யளித்​தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x