Published : 30 Nov 2024 08:02 PM
Last Updated : 30 Nov 2024 08:02 PM
சென்னை: ஃபெஞ்சல் புயலை முன்னிட்டு, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் அபராதம் இன்றி மின் கட்டணம் செலுத்துவதற்கு வரும் 10-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக மின் வாரியம் அறிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், இந்த 4 மாவட்டங்களில் உள்ள மின்நுகர்வோருக்கு மின்கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை கருத்தில் கொண்டு அவர்களுக்கு கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, நவ.30 முதல் டிச.9-ம் தேதி வரை மின் கட்டணம் மற்றும் இதர நிலுவைத் தொகையை செலுத்த வேண்டிய மின்நுகர்வோர்கள் அபராதத் தொகை இல்லாமல் டிச.10-ம் தேதி வரை செலுத்தலாம் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT