Last Updated : 30 Nov, 2024 06:01 PM

15  

Published : 30 Nov 2024 06:01 PM
Last Updated : 30 Nov 2024 06:01 PM

“நாங்கள் ஸ்லீப்பர் செல்கள் அல்ல, நாதக ‘ஸ்லீப்’ ஆகிவிட்டது” - வெளியேறிய நிர்வாகிகள் 

திருநெல்வேலி: "நாங்கள் ஸ்லீப்பர் செல்கள் இல்லை, நாம் தமிழர் கட்சிதான் ஸ்லீப் ஆகிவிட்டது” என கட்சியிலிருந்து வெளியேறும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

திருநெல்வேலியில் கடந்த 2 வாரங்களுக்கு முன் நாம் தமிழர் கட்சியின் ஆய்வு கூட்டத்தின்போது மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பார்வின் மற்றும் சீமானுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பார்வின் வெளிநடப்பு செய்திருந்தார். இந்நிலையில், திருநெல்வேலி மாவட்ட நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் இளைஞர் அணி செயலாளர் உட்பட 50 நிர்வாகிகள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சி உறுப்பினர்கள் கட்சியில் இருந்து விலகுவதாக சனிக்கிழமை அறிவித்தனர்.

இது தொடர்பாக திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பார்வின் கூறும்போது, “சீமான் புரட்சியாக பேசுவார்; ஆனால் வெற்றி பெறக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார். நம் முன்பு யாரும் எம்எல்ஏ ஆகி விடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார். சீமானுக்கு கொள்கையில் பிடித்தம் இல்லை. வேலையை விட்டுவிட்டு கட்சிக்காக உழைத்தும் அதற்கான அங்கீகாரம் நாம் தமிழர் கட்சியில் கிடைக்கவில்லை.

நாம் தமிழர் கட்சி அடுத்த கட்டத்துக்கு நகராது என்பதை தெரிந்துகொண்டு கட்சியில் இருந்து வெளியேறுகிறோம். சீமான் உளவியல் ரீதியிலான டார்ச்சரில் இருக்கிறார். நாங்கள் ஸ்லீப்பர் செல்கள் இல்லை. நாம் தமிழர் கட்சியை ஸ்லீப் ஆகிவிட்டது. உழைப்புக்கு அங்கீகாரம் கொடுக்கும் கட்சியில் இணைந்து பணியாற்ற முடிவு செய்துள்ளோம். விரைவில் அது குறித்து அறிவிப்பு வெளியாகும்” என தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x