Published : 20 Aug 2014 10:19 AM
Last Updated : 20 Aug 2014 10:19 AM

முல்லை பெரியாறு ஆய்வு கூட்டத்தை புறக்கணித்த கேரள அதிகாரிகள் குழு

முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு தொடர்பாக தமிழக எல்லையில் ஆய்வுக் கூட்டம் நடந்ததால் அதனை கேரள அதிகாரிகள் குழுவினர் புறக் கணித்தனர்.

முல்லை பெரியாறு அணையில் நீர்தேக்கும் உயரத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்திக்கொள்ள அனுமதித்து கடந்த மே மாதம் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போது, அணையின் பாதுகாப்பு, கொள் ளளவை கண்காணிப்பதற்காக மூவர் குழுவை அமைத்தும் உத்தரவிட்டது.

இதனையடுத்து அந்தக் குழுவின் உறுப்பினர்களாக மத்திய அரசு சார்பில் மத்திய நீர்வள ஆணையத் தலைமை பொறியாளர் என்.ஏ.வி.நாதன், தமிழக அரசு சார்பில் தமிழக பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் சாய் குமார், கேரள அரசு சார்பில் அம்மாநில நீர்ப்பாசனத் துறை கூடுதல் செயலர் குரியன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இதனையடுத்து இந்தக் குழுவின் முதல் கூட்டம் கடந்த ஜூன் மாதம் திருவனந்தபுரத்திலும், 2-வது கூட்டம் தேக்கடியிலும் நடைபெற்றது.

3-வது கூட்டத்தை செவ்வாய்க் கிழமை தமிழக எல்லையில் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதில் பங்கேற்பதற்காக குழு உறுப்பினர்களான என்.ஏ.வி.நாதன், சாய்குமார் ஆகியோர் பெரியாறு அணைக்கு புறப்பட் டனர். கடந்தமுறை போல அல்லாமல், இம்முறை தமிழக பத்திரிகையாளர்களும் அழைத்துச் செல்லப்பட்டனர்.

தமிழக பொதுப்பணித் துறை அலுவலகம் சென்ற அவர்கள், கேரள அதிகாரிகளின் வருகைக்காக சுமார் 1 மணி நேரம் காத்திருந்தனர். கேரளத்துக்கு சொந்தமான சுற்றுலா, வனத்துறை படகுகளில் பழுது ஏற்பட்டதால் அம்மாநில அதிகாரிகள் வர தாமதம் ஏற்படுவதாக முதலில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

பின்னர், அவர்கள் வண்டிப்பெரியாறில் இருந்து வல்லக்கடவு வழியாக காட்டுப்பாதையில் ஜீப்பில் வருவதாக தகவல் வந்தது. ஆனால், 2 மணி நேரமாகியும் அவர்கள் வந்து சேரவில்லை.

இதனையடுத்து கொட்டும் மழையில் தமிழக அதிகாரி சாய்குமார் முல்லை பெரியாறு அணையை ஆய்வு செய்ய சென்றார். சிறிது நேரத்தில் மத்திய அரசு அதிகாரி என்.ஏ.வி.நாதனும் ஆய்வுக்காகப் புறப்பட்டார். ஆய்வுப் பணியை முடித்து 2.45 மணிக்கு அலுவலகம் திரும்பினர்.

இதற்கிடையில் அணை விவகாரம் தொடர்பாக கேரளத்துக்கு வெளியே தமிழக எல்லையில் எந்தக் கூட்டம் நடைபெற்றாலும் அதில் பங்கேற்க வேண்டாம் என்று அம்மாநில அரசு உத்தரவிட்டதால்தான் கேரள குழு உறுப்பினரான குரியன் உள்ளிட்ட அதிகாரிகள் யாரும் கூட்டத்துக்கு வரவில்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டது.

கேரள அதிகாரிகள் கூட்டத் துக்கு வராததால், தமிழக அதிகா ரிகள் அனைவரும் படகு மூலம் தேக்கடி திரும்பினர். பின்னர் அங்குள்ள கேரள அரசுக்கு சொந்தமான பெரியாறு ஹவுஸில் மாலை 4.15 மணிக்கு கூட்டம் நடைபெற்றது. இதில் கேரள அதிகாரிகளும், பத்திரிகை யாளர்களும் பங்கேற்றனர்.

இதுகுறித்து தமிழக பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளரிடம் நிருபர்கள் கேட்டபோது, ‘உச்சநீதிமன்ற உத்தரவின்படி, இந்தக் கூட்டத் துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. சில கருத்துவேறுபாடுகள் காரணமாக கேரள அதிகாரிகள் வரவில்லை என்று தெரிகிறது. இருந்தாலும், அவர்களும் பங் கேற்கும் கூட்டத்தில் நாங்கள் கலந்துகொள்கிறாம்’ என்றார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x