Published : 29 Nov 2024 06:06 AM
Last Updated : 29 Nov 2024 06:06 AM
சென்னை: இருமுடி, தைப்பூச விழாவை முன்னிட்டு, மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் இருமார்க்கமாக 48 விரைவு ரயில்கள் தற்காலிகமாக நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன் விவரம் வருமாறு: சென்னை எழும்பூர் - திருச்சிக்கு டிச.14 முதல் பிப்.11-ம் தேதி வரை இயக்கப்படும் மலைகோட்டை விரைவு ரயில் (12653), சென்னை எழும்பூர்-மதுரைக்கு டிச.15 முதல் பிப்-12-ம் தேதி வரை இயக்கப்படும் பாண்டியன் விரைவு ரயில் (12637), சென்னை எழும்பூர்- செங்கோட்டைக்கு டிச.15 முதல் பிப்.12 ம் தேதி வரை இயக்கப்படும் பொதிகை விரைவு ரயில் (12661), சென்னை எழும்பூர் - மன்னார்குடிக்கு டிச.14 முதல் பிப்.11-ம் தேதி வரை இயக்கப்படும் மன்னை விரைவு ரயில் (16179), தாம்பரம் - நாகர்கோவிலுக்கு டிச.15 முதல் பிப்.12-ம் தேதி வரை இயக்கப்படும் அந்த்யோதயா விரைவு ரயில் (20691), சென்னை எழும்பூர் - கொல்லத்துக்கு டிச.15 முதல் பிப்.12-ம் தேதி வரை இயக்கப்படும் விரைவு ரயில் ( 16101), சென்னை எழும்பூர் - தஞ்சாவூருக்கு டிச.15 முதல் பிப்.12-ம் தேதி வரை இயக்கப்படும் உழவன் விரைவு ரயில் (16865), பனாரஸ் - ராமேஸ்வரத்துக்கு டிச.15 முதல் பிப்.9-ம் தேதி வரை இயக்கப்படும் விரைவு ரயில் (22536), புவனேஸ்வர் - ராமேஸ்வரத்துக்கு டிச.20 முதல் பிப்.7-ம் தேதி வரை இயக்கப்படும் விரைவு ரயில் (20896), லோக்மான்ய திலக் டெர்மினஸ் - மதுரைக்கு டிச.18-ம் தேதி முதல் பிப்.5-ம் தேதி இயக்கப்படும் விரைவு ரயில் (22101), எழும்பூர் - நாகர்கோவிலுக்கு டிச.19 முதல் பிப்.9-ம் தேதி வரை இயக்கப்படும் விரைவு ரயில் (12667) உtபட 23 விரைவு ரயில்கள் மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் தற்காலிகமாக 2 நிமிடம் நின்று செல்லும்.
இதேபோல், மறுமார்க்கமாக 25 விரைவு ரயில்கள் மேல்மருவத்தூரில் தற்காலிகமாக நின்று செல்லும். இந்தத் தகவல் தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT