Published : 29 Nov 2024 04:18 AM
Last Updated : 29 Nov 2024 04:18 AM

தமிழகத்தில் 4,453 வேளாண் கடன் சங்கங்கள் பொது சேவை மையமாகவும் இயங்கும்: திமுக எம்.பி. கனிமொழி சோமு கேள்விக்கு அமித் ஷா பதில்

சென்னை: தமிழகத்​தில் உள்ள 4,453 வேளாண் கடன் சங்கங்கள் பொது சேவை மையங்​களாக​வும் செயல்​படும் என்று நாடாளு​மன்​றத்​தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரி​வித்​துள்ளார். நாடாளு​மன்ற மாநிலங்​களவை​யில், ‘தமிழகத்​தில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களை பொருளாதார ரீதியாக வலுப்​படுத்​த​வும், அந்த சங்கங்களை பொது​மக்கள் சேவை மையமாக மாற்​ற​வும் எடுத்த நடவடிக்கைகள் என்ன?’ என்று தி.மு.க. எம்.பி., கனிமொழி என்விஎன். சோமு கேள்வி எழுப்​பி​யிருந்​தார்.

இதற்கு மத்திய உள்துறை, கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா அளித்த பதிலில் கூறி​யிருப்​ப​தாவது:4கிராமப்பு​றங்​களில் இயங்​கும் தொடக்க வேளாண் கடன் சங்கங்களை பொருளாதார ரீதியாக வலுப்​படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இதன் ஒருபகு​தியாக நாட்​டிலுள்ள 67,930 வேளாண் கடன் சங்கங்களை கணினிமய​மாக்கி ஒருங்​கிணைக்​கும் பணிகள் முழு​வீச்​சில் நடந்து வருகின்றன.

தேசிய அளவில் உருவாக்​கப்​பட்​டுள்ள பொதுவான மென்​பொருள் மூலம் நடக்​கும் இந்தப் பணிகள் முழுமை அடைந்​தால், இந்த சங்கங்​களின் செயல்​திறன் பல மடங்கு அதிகரிக்​கும். விரைவாக கடன் வழங்​குதல், குறைந்த சேவைக் கட்ட​ணம், பணம் கையாள்​வ​தில் வெளிப்​படைத்​தன்மை போன்ற நன்மைகளை இதன்​மூலம் பெற முடி​யும். வேளாண் கடன் சங்கங்​கள், தங்களின் வர்த்​தகத்தை விரிவுபடுத்​தும் வகையில் பால் பண்ணை, மீன் பிடித்​தல், பூக்கள் சாகுபடி, கிடங்​குகள் அமைப்​பது, உணவு தானி​யங்​கள், விதைகள் மற்றும் உரங்கள் கொள்​முதல் போன்ற பொருளா​தா​ரத்தை மையப்​படுத்திய 25-க்​கும் மேற்​பட்ட செயல்​பாடுகளை கையாளும் வகையில் சங்க விதிகள் திருத்தி அமைக்​கப்​படும்.

பிரதமரின் விவசாயத் தகவல் மற்றும் விவசாயப் பொருட்கள் மையத் திட்​டத்​தின்​படி, விவசா​யிகளுக்கு விதைகள், உரம், பூச்​சிக்​கொல்லி போன்ற பொருட்களை வழங்​கும் மையமாக​ வும், பிரதமரின் மக்கள் மருந்​தகம் திட்​டத்​தின் கீழ் கிராமப்புற மக்களுக்கு குறைந்த விலை​யில் மருந்து, மாத்​திரைகள் வழங்​கும் மையங்​களாக​வும் இந்த வேளாண் சங்கங்கள் செயல்பட இருக்​கின்றன.

அத்துடன், வங்கிப் பரிவர்த்​தனை, ஆயுள் காப்​பீடு, ஆதார் அட்டைக்கு விண்​ணப்​பித்தல் மற்றும் திருத்தம் செய்​தல், சுகா​தாரம் தொடர்பான சேவை​கள், மின்​சாரக் கட்டணம் செலுத்துவது போன்ற 300-க்​கும் அதிகமான சேவைகளை வழங்​கும் பொதுசேவை மையமாக இந்த வேளாண் கடன் சங்கங்கள் செயல்​படும். இதன்​மூலமாக கிராமப்புற மக்கள் எளிதில் இந்த சேவை​களைப் பெற முடி​யும். நாட்​டில் ஒட்டுமொத்​தமாக 40,214 வேளாண் கடன் சங்கங்​களும், தமிழகத்​தில் 4,453 சங்கங்​களும் இவ்வாறு பொது சேவை வழங்​கும் மையங்​களாக மாற்​றப்​பட்​டுள்ளன. தமிழகத்​தைப் பொறுத்​தவரை வேளாண் கடன் சங்​கங்​கள் மற்றும் கூட்டுறவு
ப​திவாளர் அலு​வல​கம் ஆகிய​வற்றை கணினிமயப்​படுத்த இந்த நி​தி​யாண்​டில் இதுவரை ரூ.28.2 கோடி நி​தியை மத்​திய அரசு ஒதுக்கி​யுள்​ளது. இவ்​வாறு ப​திலளித்​தார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x