Published : 28 Nov 2024 03:20 AM
Last Updated : 28 Nov 2024 03:20 AM

சைபர் க்ரைம் மோசடிகளில் இருந்து மூத்த குடிமக்கள் பாதுகாத்து கொள்வது எப்படி? - நிபுணர்கள் விளக்கம்

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சைபர் குற்ற தாக்குதல்களில் இருந்து முதியவர்கள் தங்களை தற்காத்துக் கொள்வது தொடர்பான விழிப்புணர்வு கையேட்டை வருமான வரித்துறை ஆணையர் நந்தகுமார் வெளியிட்டார். அருகில், மூத்த பெருமக்கள் ஆதரவு மன்றத் தலைவரும், முன்னாள் நீதிபதியுமான டி.என்.வள்ளிநாயகம், செயலாளர் ஆர்.சுப்புராஜ், செயற்குழு உறுப்பினர் எம்.பி.நிர்மலா, மூத்த இதய சிகிச்சை நிபுணர் சொக்கலிங்கம், சைபர் க்ரைம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரியதர்ஷினி உள்ளிட்டோர்.படம்: ம.பிரபு

சென்னை: மூத்த பெரு​மக்கள் ஆதரவு மன்றம் சார்​பில் பொது​மக்கள் குறிப்பாக மூத்த குடிமக்கள் சைபர் கிரிமினல்​களின் மிரட்​டல்​கள், அதனால் ஏற்படும் இடர்​பாடு​களில் இருந்து தப்பிப்​பது, விழிப்புடன் இருப்பது தொடர்பான விழிப்பு​ணர்வு நிகழ்ச்சி சென்னை​யில் நேற்று நடைபெற்​றது.

மூத்த பெரு​மக்கள் ஆதரவு மன்றத்​தின் தலைவரும் முன்​னாள் நீதிப​தி​யுமான டி.என்​.வள்​ளி​நாயகம் வரவேற்​றார். இந்த நிகழ்​வில் சிறப்பு விருந்​தின​ராகக் கலந்​து​ கொண்ட வருமான வரித்​துறை ஆணையர் வி.நந்​தகு​மார் பேசி​ய​தாவது: கிரெடிட், டெபிட் கார்டு, மெயில் ஐடி, நெட்​பேங்​கிங் போன்ற​வற்றில் எளிதில் அறிந்து கொள்​ளும் வகையில் ‘பாஸ்​வேர்டு’ வைக்​கக் ​கூடாது. அவ்வாறு செய்​தால் அதனை எளிதாக தெரிந்து கொண்டு சைபர் குற்​றவாளிகள் அந்த பாஸ்​வேர்டை பயன்​படுத்தி உங்கள் தகவல்​கள், தரவுகளை எடுத்து பணத்தை திருடும் அபாயம் உள்ளது. எனவே, அதனை அடிக்கடி மாற்ற வேண்​டும்.

முன்​பின் தெரி​யாதவர்கள் அனுப்பும் லிங்க்கை கிளிக் செய்​யக்​கூடாது. பணம் செலுத்​தாமல் பதிவிறக்கம் செய்​யும் செயலிகளால் ஆபத்து அதிகம். முடிந்​தவரை சாதாரண செல்​போன்​களைப் பயன்​படுத்துவது நல்லது. முகநூல், வாட்​ஸ்​அப்​பின் ‘டிபி’​யில் உங்களது புகைப்​படங்களை வைக்க வேண்​டாம். பெட்​ரோல் பங்க், உணவகங்​களில் உங்கள் கண் முன்னே டெபிட், கிரெடிட் கார்​டுகளை ‘ஸ்வைப்’ பண்ணச் செய்ய வேண்​டும். இவ்வாறு அவர் அறிவுறுத்​தினார். மத்திய அரசு மின்னணு பரிமாற்றம் மற்றும் பாது​காப்பு சங்கத்​தின் செயல் இயக்​குநர் என்.சுப்​பிரமணியம் பேசும்​போது, “குறுஞ்​செய்தி, வாட்​ஸ்​அப்​பில் வரும் செயலிகளை பதிவிறக்கம் செய்​யக்​கூடாது” என்றார்.

தேசிய இணைய பாது​காப்பு ஆராய்ச்​சிக் கவுன்​சில் (என்​சிஎஸ்​ஆர்சி) இயக்​குநர் இ.காளிராஜ் பேசுகையில், “பொது இடங்​களில் உள்ள வைஃபை-யைப் பயன்​படுத்தி முக்கிய பரிவர்த்​தனையை செய்​யக்​ கூடாது. உங்களது ‘கேஒய்​சி’யை புதுப்​பிக்க வேண்​டும் என்று சொல்லி ‘லிங்க்’ வரும். வங்கி​யில் அதுகுறித்து சரிபார்க்​காமல் ‘லிங்க்’கை கிளிக் செய்​தால் சைபர் க்​ரைம் மோசடிக்கு ஆளாக நேரிடும்” என்றார். இந்த நிகழ்​வில், மூத்த பெரு​மக்​கள் ஆதரவு மன்​றத்​தைச் சேர்ந்​தவர்​கள் உள்​ளிட்​டோர்​ கலந்​து கொண்​டனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x